உதயநிதி ஸ்டாலின் ஸ்டைலில்.. அன்புமணி அணிந்த மாம்பழ டீ ஷர்ட்.. பின்னணியில் இருக்கும் அந்த டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எப்போதும் தாம் அணிகின்ற டீ ஷர்ட்டில் உதயசூரியன் சின்னம் இருப்பதை போல் பார்த்துக் கொள்வார். தற்போது அதனை பின்பற்றி பாமக தலைவர் அன்புமணியும் தாம் அணிகின்ற டீ ஷர்ட்டில் மாம்பழ சின்னத்தை பொறித்திருக்கிறார். இது இரு கட்சிகளின் நிர்வாகிகளிடையே பேசுபொருளாகி இருக்கிறது.

தமிழ்நாடு அரசியலில் மிகவும் குறுகிய காலத்தில் துணை முதல்வர் பதவிக்கு கொண்டு வரப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்ச்சியாக பல்வேறு தேர்தல்களிலும் திமுகவை வெற்றி பெறச் செய்தவர். இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கடந்த ஆண்டு அளிக்கப்பட்டது.

Udhayanidhi vs Anbumani

அதன்பின் உதயநிதி ஸ்டாலின் எந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், வெள்ளை சட்டை அல்லது டீ ஷர்ட் அணிவதை வாடிக்கையாக மாற்றினார். அந்த சர்ட் அல்லது டீ ஷர்ட் ஆகியவற்றில் உதயசூரியன் சின்னமும், திமுக கொடியும் இருப்பதையும் உறுதி செய்து வந்தார். குறிப்பாக டீஷர்டில் உதயசூரியன் சின்னம், திமுக கொடி இருப்பது எதிர்க்கட்சிகள் இடையே சர்ச்சையாக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அதிமுக நீதிமன்றம் வரை சென்றது. ஆனாலும் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னம் மற்றும் திமுக கொடியோடு டீ ஷர்ட் அணிந்து வந்தார். இதனை பின்பற்றி திமுக இளைஞரணி நிர்வாகிகளும் அதேபோன்ற டீ ஷர்ட்டை அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணியும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார்.

சென்னையில் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி விடியல் எங்கே? என்ற பெயரில் அன்புமணி புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் சிவப்பு நிற டீஷர்ட் அணிந்த அன்புமணி ராமதாஸ், அந்த டீ ஷர்ட்டில் பாமகவின் சின்னமான மாம்பழத்தையும் பொறித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே அன்புமணி டீ ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில வாரங்களாக தங்கள் கட்சியின் சின்னத்துடன் கூடிய டீ ஷர்ட்டை அணிய தொடங்கி இருக்கிறார். அண்மையில் தனக்கு புதிய அரசியல் ஆலோசனை அணி அமைந்திருப்பதாக அன்புமணி கூறி இருந்தார். இந்த உடை மாற்றமும் அந்த அணியின் ஆலோசனையாக இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

பாமகவில் உட்கட்சி மோதல் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் வெடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு தரப்பில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவை கடுமையாக சாடி வரும் அன்புமணி, அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+