Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனாதன வழக்கு.. அந்த டிவி சேனல், யூடியூப் சேனலுக்கு உத்தரவிடுங்க! உதயநிதி தரப்பு ஐகோர்டில் வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டின் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனலுக்கு உத்தரவிட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் கோ- வாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

Udhayanidhis lawyer Wilson on Sanatana Dharma case in HC

கடந்த மாதம் 16 ஆம் தேதி நீதிபதி அனிதா சுமந்த் முன் நடைபெற்ற விசாரணையில், அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சனாதனம், மனுஸ்மிருதி ஆகியவற்றை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு வழக்கறிஞர் மனுதாரருக்காக ஆஜராவதிலிருந்து பா.ஜ.கவின் பங்கு இருப்பது தெளிவாகிறது என்றார்.

நாத்திகத்தை பின்பற்ற உரிமை உள்ளது என்றும், சமூக நலம், சீர்திருத்தங்கள் பற்றி பேசவும் உரிமை உள்ளது எனவும் கூறிய அவர், உதயநிதி தனிப்பட்ட முறையில் தான் பேசினாரே தவிர, அமைச்சர் என்ற முறையில் அவ்வாறு பேசவில்லை என்றே குறிப்பிட்டார். தகுதியின்றி பதவி வகித்தால் மட்டுமே எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என்று விளக்கம் கேட்டு கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்று அவர் கூறினார். 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே தகுதி இழப்பு செய்யப்படும் நிலையில், உதயநிதி எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி தன்னுடைய பதவியில் நீடிக்க தகுதி உள்ளதாகவும், அவர் பதவியில் நீடிக்க ஆளுநர் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை என்று வாதிட்ட வழக்கறிஞர் அப்படி அதிருப்தி தெரிவிப்பதாக இருந்தால், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது எனவும் முதலமைச்சரின் ஆலோசனையை பெற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டினார். அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ சனாதனம் பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளருக்கு பதிலாக சட்டமன்ற செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனலுக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு தரப்பு வாதம் நடைபெற்றது. இரு அமைச்சர்கள் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நாளை திமுக எம்.பி. ராசா தரப்பு வாதத்துக்காக விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+