5ம் ஆண்டில்.. அதிரடியை தொடங்கிய உதயநிதி! திமுக இளைஞரணி மொத்தமா மாறிடுச்சே -இத்தனை புதிய நிர்வாகிகளா?
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்று 5 வது ஆண்டை தொடங்கி இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் திமுக இளைஞரணி மாவட்ட - மாநகர அமைப்பாளர் / துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் @dmk_youthwing மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின்… pic.twitter.com/8LOmB7NZYh
— Udhay (@Udhaystalin) July 5, 2023
பெரியார் - அண்ணா - கலைஞர் - பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து நம் கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

அவர் பகிர்ந்த அறிவிப்பில், "கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், கழக மாவட்டம், மாநகரங்களுக்கான இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்களிடம் மண்டல வாரியாக நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டன.
நேர்காணல் முடிவு மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு இளைஞர் அணிக்கு கீழ்க்கண்டவாறு மாவட்ட, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்." என்று குறிப்பிட்டு திமுக நிர்வாக மாவட்டங்களின் வாரியாக நிர்வாகிகளை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, 72 திமுக நிர்வாக மாவட்டங்களுக்கு தலா ஒரு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications