ஆயிரம் விளக்கு அல்லது திருவாரூர்.. தொகுதி மாறும் உதயநிதி ஸ்டாலின்.. திமுக தலைமை முடிவு என்ன?
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் யாரை நிறுத்தினாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. இதனால் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் அல்லது ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், அடுத்த ஓராண்டில் துணை முதல்வராக கொண்டு வரப்பட்டார்.

இந்த நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டை. யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இதனால் உதயநிதி ஸ்டாலின் இம்முறை தொகுதி மாறுகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏற்கனவே SIR பணிகள் காரணமாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில் அதிகளவிலான வாக்குகள் பறிபோனது. அதேபோல் சில மாதங்களாகவே உதயநிதி ஸ்டாலின் வேறு தொகுதிக்கு மாறப் போவதாக சொல்லப்பட்டு வந்தது.
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் இம்முறை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 2011 மற்றும் 2016 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட கருணாநிதி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதன்பின் அந்த தொகுதியில் பூண்டி கலைவாணன் போட்டியிட்டு வென்றார்.
இம்முறை உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று பார்க்கப்பட்டாலும், ஆயிரம் விளக்கு தொகுதியும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலன் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ள அவர், கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications