உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரிந்துரை.. கனிமொழி முன் வைத்த பலே யோசனை.. ஒப்புதல் கொடுத்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கனிமொழி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இளைஞரணியில் உள்ளவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு உதயநிதி ஸ்டாலின் பேசிய நிலையில், கனிமொழியின் ஆலோசனைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு முன்பாகவே திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இளைஞரணியில் இருக்கும் 15 நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம், உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

Udhayanithi Stalin

இதற்கான கடைசி கட்ட ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் முன்னிலையில் நடந்திருக்கிறது. அப்போது ஸ்டாலினிடம் அதிக தொகுதிகளை கையில் வைத்திருக்கும் மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து தொகுதிகளை பிரிக்க வேண்டும் என்று தீவிரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு மாவட்டச் செயலாளர் கையில் 3 தொகுதிகள் தான் இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் சபரீசன் தரப்பில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள், எந்தெந்த பகுதிகளில் நிர்வாகிகள் மாற்றம் தேவை, யார் யாரின் செயல்பாடுகள் மோசமான உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக கூறி இருக்கிறார்.

மறுபக்கம் கனிமொழி தரப்பில் திமுகவில் இனி எந்த நிர்வாகி தேர்வு செய்யப்பட்டாலும், தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை கொடுத்துள்ளார். இதற்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீனியர் நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதேபோல் மாவட்டச் செயலாளர்களை பொறுப்பில் இருந்து விடுவிக்க தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே 70 வயதை கடந்த மாவட்டச் செயலாளர்களை மண்டல அளவிலான பொறுப்புக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. துணை பொதுச்செயலாளர் பதவி எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் நாளை நடக்கவுள்ள செயற்குழுவில் ஸ்டாலின் நிச்சயமாக மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+