உதயநிதிக்கு உணவு கூட கொடுக்கவில்லை.. இயற்கை உபாதைக்கு அனுமதி மறுப்பு! மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சை செல்லும் வழியில் 2 இடங்களில் நிறுத்துவதாக கூறிய போலீசார், உதயநிதிக்கு உணவு கூட கொடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். உதயநிதியுடன் போலீசார் வாகனத்திலேயே ஒன்றாக பயணித்து வரும் மா.சுப்பிரமணியன், இயற்கை உபாதைக்கு கூட வாகனத்தை நிறுத்தாமல் காவல்துறை அராஜகப் போக்குடன் செயல்படுவதாக சாடியுள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தவெக மகளிர் அணி நிர்வாகி சார்பாக தஞ்சை காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது.

Ma Subramanian

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காலையிலேயே நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு முன் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு வந்துவிட்டார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட போதும் அவரும் உடன் சென்றார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தஞ்சை அழைத்து செல்லப்பட்ட போதும், மா.சுப்பிரமணியன் வேனில் இருந்து நகரவில்லை. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தஞ்சை செல்லும் வழியில் 2 இடங்களில் நிறுத்துவதாக கூறிய போலீசார், எங்கும் நிறுத்தவில்லை.

இயற்கை உபாதைக்கு கூட வாகனத்தை நிறுத்தாமல் காவல்துறை அராஜகப் போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் சாப்பிடுவதற்காக ஒரேயொரு முறை மட்டுமே வாகனம் நிறுத்தப்பட்டது. இதன்பின் எங்குமே உதயநிதி ஸ்டாலின் செல்லும் போலீஸ் வேன் நிற்கவில்லை.

அதேபோல் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் வாகனத்திலேயே அமர வைத்து உதயநிதி ஸ்டாலின் அழைத்து செல்லப்படுகிறார். விசாரணைக்கு சொந்த வாகனத்திலேயே செல்ல முடியும். அதேபோல் சென்னையிலேயே வைத்து விசாரித்திருக்க முடியும். இருப்பினும் உதயநிதி ஸ்டாலினை அலைக்கழிக்கவே போலீசார் தஞ்சை அழைத்து செல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+