இன்பநிதி காதலியோடு இருப்பதாக வெளியான போட்டோ.. வந்து விழுந்த கேள்வி.. உதயநிதி ஸ்டாலின் "நச்" பதில்
"முதிர்ச்சியுடன் இருந்தால் அவர் அதை கையாள்வார். வரம்பை தாண்டி நான் இதில் தலையிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அவருடைய சுதந்திரம் அது."
சென்னை: இன்பநிதி காதலியோடு இருப்பதாக புகைப்படம் வெளியான நிலையில், அவருக்கு 18 வயதாகிவிட்டது எனவும், இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் அதில் வரம்பை மீறி தலையிட விருப்பம் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இவரது மனைவி கிருத்திகா உதயநிதி சினிமா இயக்குநராக இருந்து வருகிறார். இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இன்பநிதி ஸ்டாலின்
இன்பநிதி, தன்மயா ஆகிய 2 குழந்தைகள் இந்த தம்பதிக்கு உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினும் கிருத்திகா உதயநிதியும் தங்கள் காதல் பற்றி பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானபோது அடுத்து இன்பநிதி அமைச்சரா என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இன்பநிதி போட்டோ
கடந்த ஜனவரி மாதம் இன்பநிதி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது தொடர்பான பதிவுகள் ட்விட்டர், பேஸ்புக்கை ஆக்கிரமித்தன. இந்த நிலையில், அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்போது கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

கிருத்திகா உதயநிதி ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் ட்விட்டரில் கிருத்திகா உதயநிதி பதிவிட்டு இருக்கும் கருத்து பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், "காதலிப்பதற்கும், காதலை வெளிப்படுத்துவதற்கும் அச்சம் அடைய வேண்டாம். இயற்கையை அதன் முழு மகத்துவத்தோடு புரிந்துகொள்ள இதுவும் ஒரு வழி." என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் கேள்வி
இந்த நிலையில் இன்பநிதி ஸ்டாலின் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது இந்த நிலையில் யூடியூப் சேனல் நேர்காணலில் உதயநிதி ஸ்டாலினிடம் நெறியாளர் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், "அவருக்கு 18 வயது ஆகிவிட்டது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அது.

வரம்பு மீற விரும்பவில்லை
ஒரு பெற்றோராக இது அவருக்கும் எனக்கும் எனது மனைவிக்கும் உண்டான விஷயத்தை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். முதிர்ச்சியுடன் இருந்தால் அவர் அதை கையாள்வார். என்னுடைய வரம்பை தாண்டி நானே இதில் தலையிடுவதற்கு விருப்பமில்லை. அவருடைய சுதந்திரம் அது." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி மாநில செயலாளராகவும், அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். ஓரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, மனிதன், இது கதிர்வேலன் காதல், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் என பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அமைச்சரான பிறகு மாமனிதன் படத்துக்கு பின் வேறு திரைப்படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறி இருந்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications