காவலர்களே அடித்து கொன்றார்களா! அவசரமாக உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பியது ஏன்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பாலகிருஷ்ணன், கழிவறையிலேயே தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்து கொன்றார்களா என்ற கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் முறையாக பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை உசிலம்பட்டி அருகே 4 நாட்கள் முன் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாக லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கருதிய செக்கானூரணி காவலர்கள், அவரை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

Udhayanithi Stalin

அப்போது காவல் ஆய்வாளர் அறையில் அவரை அமர வைத்துவிட்டு சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் திரும்பி வந்து பார்த்த போது, அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் 2 காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி விசாரணைக்கு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்வார் என்று சந்தேகமும் கிளப்புகின்றனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?

பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+