நான் சாக்லேட் பாயா?.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு?
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சாக்லேட் பாய் என்று சொல்வதும், ஜெயக்குமாரை பிளே பாய் என்று உதயநிதி சொல்வதும் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும், அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கும் கடந்த சில நாட்களே கருத்து மோதல் நிலவி வருகிறது. உதயநிதி குறித்து ஜெயக்குமார் ஏதாவது சொல்வதும், அதற்கு மீம் டெம்ப்லேட் போலவே உதயநிதி ஏதாவது அதிரடி பதிலடி கொடுப்பதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிலும் உதயநிதி பெரும்பாலும் பேட்டி கொடுக்காதவர். இதனால் டிவிட்டரிலேயே ஜெயக்குமாருக்கு அடிக்கடி உதயநிதி பதிலடி கொடுத்து வருகிறார்.

என்ன கருத்து
இந்த நிலையில்தான் உதயநிதியை கிண்டல் செய்யும் விதமாக ஜெயக்குமார் அந்த கருத்தை கூறினார். அதில், திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், பாஜக பக்கம் சென்றுவிட்டார். திமுக அவரை ஏமாற்றிவிட்டது. அவருக்கு வேண்டிய பதவிகளை கொடுக்காமல் அவரை ஏமாற்றிவிட்டனர். உதயநிதி ஸ்டாலினால் செல்வம் ஏமாந்துவிட்டார்.

சாக்லேட் பாய்
உதயநிதி ஸ்டாலின் செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து அவரை ஏமாற்றிவிட்டார். இப்படி சாக்லேட் கொடுப்பது எப்படி என்று உதயநிதிக்குதான் தெரியும். ஏனென்றால் உதயநிதி ஒரு சாக்லேட் பாய், என்று ஜெயக்குமார் குறிப்பிட்டு இருந்தார். உதயநிதி குறித்து ஜெயக்குமார் இப்படி சொன்னது பெரிய விவாதம் ஆனது.

பதிலடி
இதற்கு உதயநிதி நேற்று பதிலடி கொடுத்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி தனது பேட்டியில், என்னை ஜெயக்குமார் சாக்லேட் பாய் என்று கூறியுள்ளார். அது ஒன்றும் கெட்ட வார்த்தை கிடையாது. அது ஒரு பாராட்டுதான். அதை நான் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். என்னை சாக்லேட் பாய் என்று கூறிய ஜெயக்குமார் ஒரு பிளே பாய், என்று உதயநிதி தனது பேட்டியை முடித்தார்.

பிளே பாய்
உதயநிதி இப்படி கூறியதும் அருகில் இருந்த எம்பி தயாநிதி மாறன் உட்பட எல்லோரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதற்கு ஜெயக்குமார் இப்போது இன்னொரு காமெடியான பதிலடியுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பேஸ்புக்கில்தான் ''டேக் தட் பிளே'' என்று மீம்கள் போடப்படும் . தற்போது அரசியலிலேயே இது போல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது .












Click it and Unblock the Notifications