நுழைவாயில் 4ல் நடந்த சம்பவம்! பதற்றமாக நின்ற அதிமுக எம்எல்ஏக்கள்! என்ன உதயநிதியா? ஏகப்பட்ட குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இருக்கை விவகாரத்திற்கு இடையில் இன்று சட்டசபைக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை நிலவியது.

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் இதற்காக தற்போது கடும் அமளி நடந்து கொண்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Udhaynidhi Comes in: What did happen outside the TN assembly when AIADMK MLAs are waiting?

இதனால் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவியில் ஆர்பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்தது. இதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்று அவையில் அமளி செய்தது.

அதிமுக இருக்கை விவாகரத்திற்கு இடையில் இன்று சட்டசபைக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஏனென்றால் இன்று தமிழ்நாடு சட்டசபைக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வர மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சர்யமாக இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர். ஒவ்வொரு எம்எல்ஏக்களாக காரில் வந்து, சட்டசபைக்கு வெளியே கூடினார்கள்.

அதன்பின் எஸ்.பி வேலுமணி தலைமையில் நேரடியாக சபாநாயகர் அப்பாவுவை சென்று சந்தித்தனர். அதில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை மாற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். இதன் காரணமாக அப்பாவு அறையில் கடுமையான விவாதம் ஏற்பட்டது.

இந்த மீட்டிங் முடிந்து அங்கிருந்து எஸ்.பி வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் நேரடியாக சென்று 4வது நுழைவாயிலில் காரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அதன்பின்தான் எடப்பாடி பழனிச்சாமி அப்பாவுவை சந்திக்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhaynidhi Comes in: What did happen outside the TN assembly when AIADMK MLAs are waiting?

அப்போதுதான் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் சட்டசபைக்கு வருகிறார் என்ற தகவல் வந்தது. அந்த நேரத்தில் நுழை வாயிலில் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் காத்துகொண்டு இருந்தனர். வெறுமனே அவைக்கு உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்பது போல அவர்கள் வெளியே காத்துகொண்டு இருந்தனர். இவர்கள் நுழைவாயில் 4ல் காத்து இருந்தனர்.

அந்த நேரம் பார்த்து சட்டசபைக்கு உள்ளே சட்டென ஒரு கார் வந்தது. கார் வந்தது ஓ பன்னீர்செல்வம்தான் வந்துவிட்டாரோ என்று எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் உற்று பார்த்தனர். ஆனால் காரில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமர்ந்து இருந்தார். அவர் வருவார் என்று அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்பார்க்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து சைலண்ட்டாக உள்ளே சென்றார். அதன்பின் 5 நிமிடங்கள் கழித்துதான் ஓ பன்னீர்செல்வம் அவைக்கு வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+