அத்தை.. நான் என்ன அட்வைஸ் சொல்றது.. சட்டென கிளம்பி கனிமொழி வீட்டிற்கு போன உதயநிதி.. கவனிச்சீங்களா?
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில்.. அவர் பல்வேறு திமுக தலைவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து பெற்று வருகிறார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியாக இருக்கும் பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும். மாநில அமைச்சர்கள் குழுவின் சீனியாரிட்டியில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி ஆகும் இது.

துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. நேற்று ஆளுநர் மாளிகை இதை பற்றி செய்தி குறிப்பாக வெளியிட்ட நிலையில், இன்று அரசு அறிவிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திமுக தலைவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து பெற்று வருகிறார். திமுக எம்பி கனிமொழி வீட்டில் சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக போஸ்ட் செய்த அவர், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை கனிமொழியின் வாழ்த்துகளைப் பெற்றோம், என்று குறிப்பிட்டு உள்ளார்.

வாழ்த்து: முன்னதாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதை வாழ்த்திய கனிமொழி.. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதை வாழ்த்துகிறேன். அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். அவருக்கு அட்வைஸ் கூற வேண்டுமா என்று கேட்கிறீர்கள். திமுகவில் யாருக்கும் அட்வைஸ் தேவை இல்லை. அவர்கள் சிறப்பாக பணி செய்வார்கள் என்று, கனிமொழி குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல் உதயநிதி செய்துள்ள இன்னொரு போஸ்டில், கழகப் பொதுச்செயலாளர் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாமா அவர்களை, நாம் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். நம்மை வரவேற்று வாழ்த்திய அவருக்கு என் அன்பும், நன்றியும், என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை @KanimozhiDMK… pic.twitter.com/vGhiNO2kPg
— Udhay (@Udhaystalin) September 29, 2024
துணை முதல்வர் பதவி: துணை முதலமைச்சர் பொதுவாக உள்துறை அமைச்சர் போன்ற கேபினட் இலாகாவையும் வைத்திருப்பர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்துறையை வைத்துள்ள நிலையில், அவர் இல்லாத நேரங்களில்.. அவர் வெளிநாடு செல்லும் நேரங்களில் உதயநிதி ஸ்டாலின் அவரின் துறைகளை கவனிப்பார். பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது.. முதல்வருக்கு துணையான பதவிதான்.
ஒரு முதல்வர் இல்லாத நேரங்களில் அவரின் முடிவுகளை எடுக்கும் பவர் துணை முதல்வருக்கு உண்டு. அமைச்சரவை கூட்டங்களை நடத்த முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் உத்தரவின் பெயரில் துணை முதல்வர் கூட்டங்களை நடத்த முடியும். ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications