சூப்பர்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து.. யூசிஜி வழங்கியது!
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினருக்கு கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர் கல்வியை மேம்படுத்தி சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) விதிப்படி, 12B அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதி உதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் 12B அந்தஸ்தினை பெறுவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 2020- ஆம் ஆண்டு உரிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

12பி அந்தஸ்து
அதன் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக்குழுவினால்(UGC) கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குழுவின் அறிக்கைக்கு UGC- யின் 551-வது நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு 12B அந்தஸ்தினை வழங்கி இருக்கிறது. UGC-யின் 12B அந்தஸ்து வழங்கப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தினை சேர்த்துள்ளது .

முதல்வருக்கு நன்றி
இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், அதனைப் பெறுவதற்கு, அனுமதி வழங்கி ஊக்கம் அளித்த இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர், இணைவேந்தர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை செயலர், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழம் நன்றி தெரிவித்துள்ளது.

துணைவேந்தர், பதிவாளர்
மேலும் தங்களது சீரிய பங்களிப்பினை வழங்கிய துணைவேந்தர், பதிவாளர், முதல்வர், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், அலுவலக நண்பர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து இணைவுப்பெற்ற கல்லூரி நிர்வாகிகள், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்த அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழம் நன்றி கூறியுள்ளது.

புதிய கல்விசார் திட்டங்கள்
12B அந்தஸ்தினை பெற்றதின் பயனாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு இனிவரும் காலங்களில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் உயர்கல்வியை ஊக்குவிக்கும் நாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நிதிஉதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தரப்பினர் வாழ்த்து
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு 12 பி அந் தஸ்து வழங்கியதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினருக்கு கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications