இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. லிஸ்ட்டை வெளியிட்ட யுஜிசி! பட்டங்கள் செல்லாது.. அதிர்ச்சி!
சென்னை: இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டம் செல்லாது என்றும், அந்த பட்டங்களால் வேலைவாய்ப்பு பெற முடியாது என்றும் யுஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியாது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை.

டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், வணிக பல்கலைக்கழகம் லிமிடெட், தர்யாகஞ்ச் கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்), ஏடிஆர்-மைய ஜூரிடிகல் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன், திலாஸ்பேட்டை, கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கர்நாடகாவில் படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், கோகாக், பெல்காம் உட்பட நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன.
எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களையும், போலி பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களையும் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications