Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காண்டம்".. பிரபல நடிகையை சீண்டும் நெட்டிசன்கள்.. அந்த விளம்பரத்தால் வந்த வினை.. இதெல்லாம் தப்புங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈஸ்வரன் படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் நடித்த விளம்பரம் ஒன்றால் அவரை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த விளம்பரத்தில் ஆபாசம் எதுவும் இல்லாத நிலையிலும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Recommended Video

    விளம்பரத்தால் வந்த வினை.. Nidhhi Agarwal-ஐ சீண்டும் நெட்டிசன்கள்

    பிரபல ஆணுறை நிறுவனமான durex நிறுவனம் பொதுவாகவே வைரல் விளம்பரங்களை வெளியிடுவது வழக்கம். இணையத்தில் டிரெண்டாகும் விஷயங்களை வைத்தே காண்டம் குறித்த விழிப்புணர்வை இந்த நிறுவனம் செய்து இருக்கிறது.

    இந்தியாவில் இன்னும் காண்டம் குறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லாத நிலையில்தான் இந்த நிறுவன விளம்பரங்கள் பல வைரலாகி வருகின்றன.

    நடிகை நிதி அகர்வால்

    நடிகை நிதி அகர்வால்

    இந்த நிலையில் பிரபல பெண் நடிகைகளை வைத்து durex நிறுவனம் தற்போது விளம்பரங்களை முன்னெடுத்து வருகிறது. அதாவது ஆணுறை பயன்பாட்டின் அவசியம், பாலியல் ரீதியான தூய்மை உள்ளிட்ட பல விஷயங்களை இதில் நடிகைகள் பேசி வருகின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்தான் இதுவரையிலான விளம்பரங்கள் அமைந்துள்ளன. பிரபல நடிகை ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இந்த விளம்பரத்தில் வருகிறார்கள்.

    காண்டம் விளம்பரம்

    காண்டம் விளம்பரம்

    இந்த நிலையில் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் இதே விளம்பரத்தில் நடித்து இருந்தார். durex நிறுவனத்தின் அந்த காண்டம் விளம்பரத்தில்.. காண்டம் குறித்த விவரங்களை அவர் தெரிவித்தார். அதோடு ஏன் பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஏன் காண்டம் அணிய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் இதை விழிப்புணர்வாக எடுத்துக்கொள்ளாமல் நெட்டிசன்கள் பலர் அதை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

     நிதி அகர்வால் விளம்பரம்

    நிதி அகர்வால் விளம்பரம்

    அந்த வீடியோவிற்கு கீழே மிகவும் ஆபாசமாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள், முக்கியமாக அந்த நடிகையின் உடையை கிண்டல் செய்தும், அந்த விளம்பரம் காரணமாகவும் பாலியல் ரீதியாகவும் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் இன்னும் ஆணுறை பயன்பாடு, consensual உறவுகள் குறித்த போதிய புரிதல் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் அதை பற்றி பேசும் நபர்களை கூட கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கு நிலவி வருகிறது.

    சர்ச்சை

    சர்ச்சை

    அதிலும் நிதி அகர்வாலின் சமூக வலைத்தள பக்கங்கள் முழுக்க அவரை மிக மோசமாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். பாலியல் உறவிற்கு அழைத்து சிலர் கமெண்ட் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு விளம்பரத்தில் நடிப்பதும், நடிக்காததும் தனி நபர் தேர்வு. இதை கூட புரிந்து கொள்ளாமல் அந்த நடிகையின் பர்சனல் விஷயங்களுக்குள் புகுந்து கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் வைப்பது சர்ச்சையாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+