உமா ஆனந்தன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தை! அதுதாங்க தமிழக அரசு! மாமன்ற கூட்டத்தில் கவனிச்சிங்களா!
சென்னை: வழக்கமாக மாமன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேச தொடங்கினாலே, சலசலப்பு ஏற்படும். ஆனால், இன்று அவர் பேசிய வார்த்தைகள் அனைத்து கவுன்சிலர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மாமன்ற கூட்டத்தில் உமா ஆனந்தன் பேச தொடங்கினாலே, நாலாபுறமும் இருந்து எதிர்க் கருத்துக்களும், விமர்சனங்களும் வர தொடங்கிவிடும். இப்படி இருக்கையில், இன்று உமா ஆனந்தனின் பேச்சுக்கு திமுகவினரே வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

என்ன நடந்தது மாமன்ற கூட்டத்தில்?
"எனது வார்டு மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதியில் 80%-ஐ நான் நிறைவேற்றிவிட்டேன் என்று பெருமையுடன் கூறுகிறேன். அந்த பெருமை உங்களையும் சேரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி சொன்ன உமா ஆனந்தன்
நான் பாஜகவை சேர்ந்தவர், எனவே இவருக்கும், இவர் பொறுப்பில் இருக்கும் வார்டுக்கும் எதையும் செய்யக்கூடாது என்று நினைக்காமல் அனைத்தையும் செய்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
ஒத்துழைப்பு இருக்கு
இதனையடுத்து மாமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பேசியது பொய் கிடையாது. உண்மையைதான் சொன்னேன். எனது பகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதியில் 80% -ஐ நிறைவேற்றிவிட்டேன். இப்போது இருக்கும் ஆளும் கட்சி எனக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் என்னால் இதை செய்திருக்க முடியாது.
ஆலோசனை கூட கெட்பேன்
எனவே இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. நான் என்னுடைய பணியை செய்ய எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. விசிக, மதிமுக என அனைத்து கட்சியினரும் கட்சி பேதமின்றி என்னிடம் பழகினார்கள். மாமன்றத்தில் கூட நான் மற்ற கட்சியின் கவுன்சிலர்களிடம் ஆலோசனை கேட்பதுண்டு. நான் முதல்முறை கவுன்சிலர். ஆனால், மற்ற கட்சியினர் அப்படியல்ல. எனவே அவர்களிடம் நான் ஆலோசனை கேட்டிருக்கிறேன்.
நான் கேட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. முன்பெல்லாம் மேற்கு மாம்பலம் பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சனை இருந்தது. இந்த முறை ஒரு இடத்தில் கூட மழைநீர் தேங்கவில்லை" என்ற கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications