நிலம் வாங்குவோர் கவனத்திற்கு.. கூட்டுப்பட்டா மாற்றம், அன்அப்ரூவ்டு மனைகள்.. ஹென்றி சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பெயிரா தலைவர் ஹென்றி, பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு தகவல்களை அதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்குவது, விற்பது மற்றும் அது சார்ந்த சட்ட சிக்கல்கள் குறித்த உண்மைகளை உடைக்கும் வகையில் அவர் அளித்துள்ள இந்த பேட்டி, தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் சிக்கல்களை பற்றி, அந்த பேட்டியில் பேசிய ஹென்றி, நிலம் வாங்கிய பிறகு அதை அனாதையாக விடக்கூடாது. எல்லையை அளந்து கற்களை நட்டு, வேலி அமைத்தோ அல்லது காம்பவுண்ட் சுவர் கட்டியோ பாதுகாப்பது மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

Unapproved Plots

கூட்டுப்பட்டா, சென்டில்மெண்ட் ரெக்கார்டு

அதேபோல், மூதாதையர் பெயரில் உள்ள கூட்டுப்பட்டாவை, வாரிசுச் சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி தனிப்பட்டாவாக (Sub-division) மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

சொத்து வாங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய ஆவண சரிபார்ப்புகள் குறித்து விளக்கம் தந்துள்ளார் ஹென்றி.. அதில், "முந்தைய ஆவணங்கள், பட்டா, வில்லங்கச் சான்றிதழ் (EC), செட்டில்மெண்ட் ரெக்கார்டு (SLR/RSLR) ஆகியவற்றை வழக்கறிஞர் மூலம் சரிபார்க்க வேண்டும்.

விலை குறைவு என்பதற்காக அவசரப்பட்டு சொத்துக்களை வாங்க வேண்டாம், சந்தை மதிப்பை அரசு மறு ஆய்வு செய்து வருவதால், விரைவில் வழிகாட்டி மதிப்பு உயருவதற்கு வாய்ப்புள்ளதால், நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளை விரைவாக முடிப்பது நல்லது.

நிலம் தொடர்பான பிரச்சனை

சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள் மற்றும் வணிக வளாகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.. இதற்கான ஒதுக்கீடு, ஆகஸ்ட் 21 முதல் குலுக்கல் முறையிலும், 24-தேதி "முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை" அடிப்படையிலும், 25தேதி பொது ஒதுக்கீடு (Common Pool) அடிப்படையிலும் நடைபெறும்.

விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தியடைந்த தமிழகக் குடிமகனாக இருக்க வேண்டும், இதற்கு முன் வீட்டு வசதி வாரியத்திடம் எந்த ஒதுக்கீடும் பெற்றிருக்கக் கூடாது என்பது அடிப்படைத் தகுதி ஆவார்.

கூட்டுக்குடும்ப சொத்து

அதேபோல கூட்டுக்குடும்ப சொத்துக்களில் வாரிசுகள் தங்களுக்குள் சுமுகமாகப் பேசிப் பிரித்துக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் நீதிமன்றம் மூலம் பாகப்பிரிவினை வழக்கு தொடுத்துச் சட்டப்பூர்வமாக பிரித்து கொள்ளலாம். ரியல் எஸ்டேட் மோசடிகளில் சிக்கியவர்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) புகார் அளிக்கலாம் மற்றும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்,

ஆனால் அங்கீகரிக்கப்படாத மனைகளை (Unapproved Layouts) வாங்குவது விதிமீறல், அரசு உபரி நிலங்கள் (Surplus Land) தொடர்பாக வருவாய்த் துறையிடம் தடையின்மை சான்று பெற்ற பிறகே பட்டா மாற்றம் செய்ய முடியும்" என்றெல்லாம் ஹென்றி விரிவான வழிகாட்டலை அந்த பேட்டியில் வழங்கியிருக்கிறார்.. நிலம் வாங்கத் திட்டமிடும் அத்தனைபேருக்கும் இந்த ஆலோசனைகள் பெரும் பயனாக அமைந்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+