அங்கீகாரம் இல்லாத மனை பத்திரங்களை பதிவு செய்தால் ரத்து.. கிரிமினல் கேஸ்: வீட்டு மனை ரூல்ஸ் மாறியது
சென்னை: அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் வைத்திருப்பது பல்வேறு பாதகங்களை ஏற்படுத்தும் என பதிவுத்துறை எச்சரித்துள்ளது... இதற்கான காரணத்தையும் விளக்கி, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த புதிய நடைமுறை என்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் சட்டப்படி முழுமையாக பதிவு செய்யப்படாததால், அந்த மனைக்கு உரிமை உங்களுடையது என்பதை அதிகாரப்பூர்வமாக நிரூபிப்பது கடினமாகிறது.... எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரி நீதிமன்றத்தை அணுகினால், சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும். அத்துடன், சொத்துகளை வாங்குவதிலும் விற்குவதிலும் பல சிக்கல்களும் ஏற்படுகின்றன...

அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள்
வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற முயன்றால், அங்கீகாரம் இல்லாத காரணத்தால் கடன் வழங்க மறுக்கும் வாய்ப்பு அதிகம். மேலும், சொத்தை விற்கும் போது வாங்குபவர்களுக்கு நம்பிக்கை ஏற்படாததால், விற்பனை நிறைவேறாமல் போகும் நிலையும் உருவாகிறது.
அதேபோல உரிமையாளர் இறந்த பிறகு, வாரிசுகள் இடையே பரம்பரை தொடர்பான பிரச்சனைகள் தோன்றும் அபாயமும் அதிகமாக உள்ளது.. காரணம், மனை யாருடையது என்ற தெளிவு இல்லாததால் குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடுகள், சட்ட வழக்குகள் போன்றவை உருவாகி, இது காலத்தையும் பணத்தையும் அதிகமாக வீணாக்கும் சூழலை ஏற்படுத்தும்.
வீட்டு மனைகள் பதிவு ரூல்ஸ் மாறியது
அதேபோல், அங்கீகாரம் இல்லாத மனைகளில் அபகரிப்பு, மோசடி போன்ற ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. அரசு பதிவுகள், நகராட்சி அல்லது ஊராட்சி ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதிலும் தடைகள் ஏற்படுவதால், அந்த சொத்தை முழுமையாக பயன்படுத்தவும், எதிர்காலத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியாத நிலை உருவாகுகிறது.
அதனால்தான், அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை பதிவுக்கு ஏற்கக் கூடாது என்றும், அப்படியே பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதுடன், இதில் தொடர்புடைய அனைவர்மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்ய 2016ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் பதிவு சட்டத்தில் உரிய வழிவகை செய்யப்பட்டது.
தமிழக அரசு - சுற்றறிக்கை
இதுகுறித்து சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் தெளிவான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். ஆனாலும்கூட, சில இடங்களில் அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக நகர் மற்றும் ஊரமைப்பு துறை, பதிவுத்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து, முறையான அங்கீகாரம் மற்றும் வரன்முறை சான்றிதழ் இல்லாத மனை பத்திரங்களை பதிவு செய்ய ரியல் எஸ்டேட் ஆணையம் தடை விதித்தது. இதன் காரணமாக, அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவுக்கு வருவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
ஆனால், சில இடங்களில் வீட்டு மனை என்று குறிப்பிடாமல், அங்கீகாரமில்லாத வீட்டு மனை பத்திரங்களை சார்-பதிவாளர்கள் பதிவு செய்வதாக புகார்கள் தொடர்ந்துள்ளன... இதையடுத்து, சார்-பதிவாளர் அலுவலகங்களில் புதிய அறிவிப்பு பலகைகளை வைக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும், அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவு செய்யப்படமாட்டாது என்பதை வலியுறுத்தும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அறிவிப்பு பலகை
அந்த அறிவிப்பு பலகையில், அங்கீகாரமில்லாத, வரன்முறை செய்யப்படாத, வீட்டு மனை விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டால், அதை சார் - பதிவாளர்கள், பதிவுக்கு ஏற்கக் கூடாது.
இதை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் உட்பட அனைவர் மீதும், கிரிமினல் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications