பட்டாணிக்கடைக்காரருடன் ஓடிய 3 குழந்தைகளின் தாய்.. கள்ளக்காதலனிடம் சேர்த்து வைத்து அழகு பார்த்த கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுளி மாவட்டத்தில் சம்பவம் கவனம் பெற்றுள்ளது.. தன்னுடைய மனைவி கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், அவரது விருப்பப்படியே அந்த காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் முஸ்கான் என்பவர் தன்னுடைய கணவரை கொன்றது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவர் ராஜ்புத்துக்கு கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால், மனைவி முஸ்கானும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து அவருக்குச் சாப்பாட்டில் தூக்க மாத்திரை கொடுத்து, கத்தியால் இதயத்தில் குத்தியும் தொண்டையை அறுத்தும் கொடூரமாகக் கொன்றனர்.

Pea Seller Extra Marital Affair Husband Wife Uttar Pradesh

புளூ டிரம் - கணவன்

பின்னர் உடலை 15 துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்த ப்ளூ டிரம்மில் போட்டு சிமெண்ட் கலவையை ஊற்றி மூடி மறைக்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கினர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்திற்குப் பிறகு நிறைய கணவன்மார்கள், தங்கள் மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.. டிரம்முக்குள் அடைபட்டு சாவதை விட மனைவியை அவரது கள்ளக்காதலனுடனேயே சேர்த்து வைப்பதே சிறந்தது என்றும் கணவன்மார்கள் முடிவெடித்து, மனைவிகளை தாரை வார்த்துத் தரும் வினோத பழக்கம் அரங்கேற தொடங்கியுள்ளது. இப்போதும் ஒரு திருமணம் நடந்துள்ளது.

சரிதாவின் கள்ளக்காதலன்

உத்தர பிரதேசம் சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவருடைய மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மனைவி சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரிலேயே வசித்து வந்தார்.

கணவர் வெளியூரில் இருந்த நேரத்தில், சரிதாவுக்கு ரயில்வே ஸ்டேஷனில் பட்டாணி விற்பனை செய்யும் 25 வயது இளைஞர் அஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

பட்டாணிக்கடைக்காரர்

ஒரு கட்டத்தில் சரிதா தனது காதலன் அஜய்யுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இந்த விஷயம் தெரிந்து ஜீவநாத் அதிர்ச்சியடைந்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடி பல இடங்களில் அலைந்து திரிந்தார். கடைசியில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தனது மனைவி சரிதாவையும், அஜய்யையும் கண்டுபிடித்தார். அப்போது சரிதாவிடம் கண்ணீருடன் கெஞ்சி, தன்னுடன் வருமாறு ஜீவநாத் கேட்டுக்கொண்டார்.

ஆனால், இனிமேல் பழைய வாழ்க்கைக்கு தன்னால் திரும்ப முடியாது என்றும், தனக்கு இனி எல்லாமே பட்டாணிக்கடைக்காரர் அஜய்தான் என்றும் உறுதியாக சொல்லிவிட்டார்.

தன் மனைவி இனி தன்னுடன் வரமாட்டார் என்பதை உணர்ந்துகொண்ட ஜீவநாத், அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி, அவர்கள் இருவரையும் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சரிதாவுக்கும் அஜய்க்கும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைத்தார்.

கணவன் செய்த ட்விஸ்ட்

"நான் சரிதாவுடன் வாழ விரும்பினேன். ஆனால் அவளுக்கு அதில் விருப்பமில்லை. எனவே, என்னால் முடிந்ததை அவளுக்காகச் செய்துவிட்டேன்" என்று ஜீவநாத் மிகவும் பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.

இவ்வளவு செய்தும் சரிதா திருப்தியாகவில்லை.. தனது கல்யாண வாழ்க்கை முறிந்துபோனதற்கு ஜீவநாத் தான் காரணம் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குடும்பச் செலவுகளை சமாளிக்க ஜீவநாத் போதிய பணம் அனுப்பவில்லை என்றும், அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும், கணவனே முன்வந்து மனைவியின் காதலனுடன் திருமணம் செய்து வைத்த இந்த சம்பவம், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அத்துடன் விவாதங்களையும் கிளப்பியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+