சாம்பார் ஊத்தியே என்னை கொல்றா சார் – நள்ளிரவில் பறந்த 112 போன்.. கதவை திறந்த போலீசாருக்கு ட்விஸ்ட்
சென்னை: குடும்ப உறவுகளுக்குள் மனஸ்தாபங்கள் வருவதுவது சகஜம்தான்.. அதிலும் கணவன் - மனைவியிடையே இப்படியான சின்ன சின்ன வருத்தங்கள் வந்துபோவதும் இயல்புதான்.. ஆனால், சில நேரங்களில் இந்த சின்ன வருத்தமே, எல்லை மீறி போய்விடுவதும் உண்டு.. அப்படி ஒரு வினோதமான நிகழ்வு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது...!!!
உத்தரப் பிரதேச மாநிலம் வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு எண்ணெயில் பொறித்த உணவு என்றால் ரொம்பவும் பிரியமாம்.. காரசாரமான குழம்பு வகைகள் என்றால் சாப்பாட்டை கொஞ்சம் விரும்பியே சாப்பிடுவாராம்..

உத்திரப் பிரதேச கணவன்
ஆனால் இவரது மனைவியோ தினமும் சாப்பாட்டில், சாம்பார் வைத்து ஊற்றியிருக்கிறார்.. இதனால் சாம்பாரை சாப்பிட்டு சலித்து போன கணவன், தனக்கு பிடித்த காரசார குழம்பு வைத்து தரும்படி கேட்டுள்ளார்.. ஆனால், மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்..
தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதிலும், மனைவி தினமும் சாம்பாரையே சமைத்து வந்தாராம்.. இதனால் இருவருக்கும் இடையே சாம்பார் தொடர்பாக அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன.
சாம்பார் வைத்த மனைவி
அப்படித்தான் சம்பவத்தன்று இரவும், மனைவி வழக்கம்போல் சாம்பார் சமைத்து வைத்துள்ளார். சாம்பாரை பார்த்ததுமே உச்சக்கட்ட கோபத்துக்கு போன கணவர், மனைவியுடன் சண்டைக்கே போய்ட்டார்.. "எனக்கு பிடித்த குழம்பை செய்யாமல், தினமும் சாம்பார் வைத்து ஏன் இப்படி தொல்லை செய்கிறாய்?" என்று கேட்டுள்ளார்.. இந்த வாக்குவாதம் நள்ளிரவு வரை ஓடியது..
எவ்வளவு சொல்லியும் மனைவி தன்னுடைய பேச்சை கேட்காததால், ஆத்திரத்தின் உச்சிக்கே போன கணவர், உடனடியாக தன்னுடைய செல்போனில் இருந்து, 112 என்ற எமர்ஜென்சி நம்பருக்கு போன் செய்தார்.. "குடும்பத்தில் பெரிய சண்டை நடக்கிறது, உடனே புறப்பட்டு வாங்க" என்று புகார் தந்துள்ளார்..
நள்ளிரவு சாம்பார் சமரசம்
நள்ளிரவு 12 மணிக்கு புகார் வந்ததுமே, அவசர போலீசார் அதிர்ந்து போனார்கள்.. குடும்பத்தில் பெரிய சண்டை நடப்பதற்குள் எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று, ரோந்து காவல்துறையினர் பதற்றத்துடன் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்றனர். ஆனால், அங்கு சென்றதும்தான், சாம்பார் கதை வெளியே வந்தது..
தினமும் காரசார பொறித்த குழம்பு கேட்டால், மனைவி எப்போதும் சாம்பார் செய்து தருகிறார் என்று கணவர் அதிகாரிகளிடம் கூறினார். இதைக் கேட்டுத் திகைத்துப் போன போலீசார், கணவன்-மனைவி 2 பேரையும் அமைதியாக உட்கார வைத்து பேச வைத்து சமரசம் செய்தார்கள்..
பிறகு அவர்களது குடும்ப உறுப்பினர்களுடனும் இது குறித்து விவாதித்து, "இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் பெரிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம். நள்ளிரவில் இதுபோன்ற காரணங்களுக்காக அவசர எண்ணை அழைக்கக் கூடாது" என்று இருவருக்கும் அட்வைஸ் தந்துவிட்டு சென்றார்கள்.
கோர்ட்டுக்கு போன கணவர்
இந்த சம்பவம் போலவே சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்தது.. சத்னா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தினமும் ஒழுங்காகச் சமைத்து போடுவதில்லை என்று சொல்லி, கோர்ட் படியேறிவிட்டார்.. தினமும் சமைக்காமல், தனக்கு மன உளைச்சலை மனைவி தருகிறார் என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.. இப்போது, இந்த சாம்பார் சம்பவம்தான் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது..!!!


Click it and Unblock the Notifications
