கங்குவாவுக்கு டிசைன் டிசைனா வரும் பிரச்சினை! சூர்யாவுக்கு குறுக்கே எஸ்கே? அமரனை தூக்காத தியேட்டர்கள்
சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பண விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் கங்குவா ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கிடையே சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மூலமும் கங்குவாவுக்கு சிக்கல் முளைத்திருக்கிறது.
முதன்முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் பல்வேறு தடைகள் பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அப்போது வேட்டையன் படத்தின் ரிலீஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படம் இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நவம்பர் 14 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு,, தொடர்ந்து படத்துக்கான பிரமோஷன் பணிகளில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். படம் 2000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க சென்னையில் தற்போது மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் இருக்குமா என்பது ஒரு கேள்வி. இது மட்டுமல்லாமல் அர்ஜுன் லால் என்பவரிடம் கங்குவா படத்திற்காக ஸ்டுடியோ கிரீன் 20 கோடி கடன் வாங்கிய நிலையில் அந்த பணத்தை செலுத்திய பிறகு தான் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலைமையில் இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க அமரன் திரைப்படம் கங்குவா படத்திற்கு புதிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. கடந்த 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மேஜர் முகந்த் வரதராஜனின் வரலாற்று திரைப்படமான அமரன் வெளியானது. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் போகப் போக படத்தின் பிக்கப் அதிகரித்தது. மேலும் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக சில கட்சிகள் போராட்டத்தில் குதிக்க அதுவே படத்துக்கான பிரமோஷன் ஆக மாறிப்போனது.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த், பாஜகவினர் பல பிரபலங்களும் படத்தை பாராட்ட, படத்தின் வசூல் குவிந்து வருகிறது. தற்போதைய தகவல்களின் படி அமரன் 250 கோடிக்கு மேல் படத்தின் வசூல் தாண்டி இருக்கும் நிலையில் அமரன் படம் கங்குவாவுக்கு சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. பொதுவாக ஒரு படம் வெளியானால் 28 நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும். ஆனால் தற்போது வரை தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் தவிர்த்து பொதுமக்களும் மாணவர்களும் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் படம் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் எதற்காக படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்க வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ பல தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் அமரனுக்கு கிடைத்திருக்கிறது.
தற்போதைய சூழலில் அமரன் படத்தை எடுத்தால் மட்டுமே கங்குவாவுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைக்கும் என கூறுகின்றனர் விநியோகஸ்தர்கள். 2000 தியேட்டர்களுக்கு மேல் வெளியானால்தான் முதல் நாள் கலெக்ஷனில் ஓரளவு பார்க்க முடியும். ஆனால் முதல் நாளிலேயே கங்குவா படத்தை திரையிட்டு விட்டு அமரன் படத்தை தூக்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்து வரும் கங்குவா வசூல் சாதனை புரியுமா என்பதுதான் தற்போதைய சினிமா வட்டாரங்களில் பேச்சாக இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications