"வெற்றி" போயிட்டாரே.. கிஞ்சித்தும் மனசாட்சியே இல்லாமல் கொண்டு போன கொரோனா.. இரக்கமே இல்லாத 2020...!
அமமுக வெற்றிவேல் இழப்பு மறக்க முடியாத ஒன்று
சென்னை: ஈவிரக்கமில்லாமல், கிஞ்சித்தும் மனசாட்சியே இல்லாமல் கொரோனா கொண்டு போன ஒரு முக்கியமான தமிழக தலைவர் அமமுகவின் வெற்றிவேல் ஆவார்! இந்த வருடத்தில் ஆயிரக்கணக்கானோரை இந்த தொற்றுக்கு நாம் இழந்திருந்தாலும், வெற்றிவேலின் இழப்பு நம்மை மீண்டெழ செய்யாமல் நிலைகுலைய வைத்துவிட்டது!
கட்சியில் வலுவான இடத்தில், அதிகாரமிக்கவராக ஒரு மூத்த தலைவர்களை பார்க்கும்போது, பெரிதாக எந்த பலவீனமான எண்ணமும் நமக்கு வருவதில்லை.
ஆனால், உடல்நலம் குன்றியது என்ற செய்தி வரும்போதுதான், அவர்களை பற்றின நல்லவைகளும் நம் கண் முன்னால் விரிந்துவிழும்.. அப்படிப்பட்ட ஒரு ஆளுமைதான் அமமுகவின் வெற்றிவேல்.

உண்மை
வெற்றிவேலை பொறுத்தவரை மனசில எதையும் வெச்சுக்க மாட்டார்.. தப்புன்னா அதை உடனே கேட்டுடுவார்.. பக்கத்தில யார் யார் இருக்காங்க, இப்போ சொல்லலாமா? வேணாமா என்ற தயக்கமே அவரிடம் இருக்காது.. அப்படியே போட்டு உடைச்சிடுவார்.. எப்பவுமே உண்மையின் பக்கம் நிற்கணும் என்பதை தான் பின்பற்றுவதுடன், அடுத்தவர்களுக்கும் எந்நேரமும் இதை அட்வைஸாக தந்து கொண்டே இருந்தவர்.

டிடிவி தினகரன்
சசிகலாவை எந்த அளவுக்கு டிடிவி தினகரன் நம்புகிறாரோ தெரியாது.. ஆனால், வெற்றிவேல் மீது அபரிமிதமான நம்பிக்கையை வைத்திருந்தவர்.. வெற்றி.. வெற்றி என்று உரிமையுடன் கூப்பிட்டவர்.. ஜெயலலிதாவை ஆர்கேநகரில் வெற்றி பெற வெச்ச மாதிரியே, தினகரனையும் வெற்றி பெற வைத்து ஆபரேஷனை சக்சஸ் செய்து காட்டிவர்.. அந்த குட்டி தேர்தலில் திமுக, அதிமுகவை அலற வைத்தவர்.

தங்க தமிழ்செல்வன்
செந்தில்பாலாஜி கட்சியில் இருந்து போனபோதும் சரி, தங்க தமிழ்செல்வன் போன போதும் சரி, உருக்குலைந்து போயிருந்த தினகரனுக்கு தெம்பாக பக்கத்தில் இருந்தவர் சாட்சாத் வெற்றிவேல்தான்... கட்சி ரீதியாக மட்டுமில்லை, தனிப்பட்ட முறையிலும் வெற்றிவேலின் மனசு ஈரம்தான்.. யார் உதவி என்று வந்து கேட்டாலும் உடனே செய்துடுவார்.. "யோவ்.. கொரோனா நேரத்தில் நிர்வாகிகள் கிட்ட பணமே காணோமே.. அக்கவுண்ட் நம்பர் குடுய்யா.. பணம் போட்டுவிட்டுடறேன்" என்று உரிமையாக வந்து கேட்டு பணத்தை தரும் குணம் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை.

ஓவர் வெயிட்
ஆயிரம் இருந்தாலும், தன் உடல்நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தி இருக்கலாம்.. ஓவர் வெயிட் இருப்பது தெரிந்தும், ஏற்ககனவே ஹார்ட் ஆபரேஷன் முதற்கொண்டு, பலவித சிக்கல்கள் உடலில் இருப்பது தெரிந்தும், மா.செ.க்கள் கூட்டத்தை நேரிடையாக அவர் நடத்தியிருக்க கூடாது.. இதை அமமுகவின் மூத்த தலைகள் யாராவது தடுத்து நிறுத்தி, வீடியோ கான்பரன்ஸ் மூலமே நடத்த சொல்லி இருந்திருக்கலாம். அதுவும் இல்லாமல், புதிதாக குடியேறிய அந்த ராயப்பேட்டை ஆபீஸ் ராசியில்லாமல் இருப்பதாக ஒரு பேச்சு கசியும்போதே அதை சரி செய்திருக்கலாம்..

வெற்றிடம்
எந்த மீட்டிங் நடந்தாலும் , முதல்ல மாஸ்க்கை போடுங்கய்யா, ஏன் இப்படி அசால்ட்டா இருக்கீங்கன்னு என்று பார்ப்பவரை எல்லாம் அலர்ட் செய்துக்கிட்டே இருந்த வெற்றிவேலுக்கே இந்த நிலைமையா என்பதைதான் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், ஒன்று விசுவாசம்ன்னா அது வெற்றிவேல்தான்.. உண்மைன்னா அது வெற்றிவேல்தான்.. வெற்றிவேலின் இழப்பு அமமுகவின் வெற்றிடமாகவே இன்னும் உள்ளது!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications