உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்! 234 தொகுதிகளில் 788 பணிகள்! ஸ்டாலின் பச்சைக்கொடி!
சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதங்களின் அடிப்படையில் பணிகளுக்கு அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
கடந்த 7.05.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 22.08.2022 அன்று எழுதிய கடிதத்தில் அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டச் செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை 28.09.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து 1896 பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்தது.
பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அனைத்து துறைகளிடமிருந்தும் இது தொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி, நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், 2023-24ஆம் ஆண்டில் செயல்படுத்த எடுத்துக்கொள்ளும் பணிகள், என வகைப்படுத்தப்பட்டு அப்பணிகளுக்கு 8.9.2023 அன்று அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலான பணிகளை தேர்வு செய்யும் குழு ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. மேலும், 2024-25ம் ஆண்டில் 203 பணிகள் ரூ.5,901 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications