உங்களுடன் ஸ்டாலின் முகாமில்.. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு.. வருது குட்நியூஸ்
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாமின் முதல் வாரத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன. அதாவது உங்களுடன் ஸ்டாலின் முகாமின் முதல் வாரத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அது தொடர்பான பதில் கிடைக்கலாம்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் செய்தால் 45 நாட்களில் அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படி பார்க்கும் பட்சத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாமின் முதல் வாரத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் பதில் கிடைக்கும். அவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, அவர்கள் தகுதி உள்ளவர்களா இல்லையா என்பது ஆகஸ்ட் மாத இறுதியில் தெரிய வரும்.

தொடக்கத்திலேயே விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் இனி விண்ணப்பம் செய்பவர்கள் எல்லோரையும் சேர்த்து மொத்தமாக டிசம்பரில் இருந்தே மகளிர் உரிமை தொகை புதிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன.
மகளிர் உரிமை தொகை
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களில் இதுவரை சுமார் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில், மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி மட்டும் 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மனுக்கள் பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த திட்டத்தின் கீழ் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்திற்கு வெறும் ஐந்து ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகளிர் உரிமை தொகை உங்களுடன் ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் பத்து நிமிடங்களில் அனைத்து பணிகளும் முடித்துத் தரப்படுகின்றன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, எளிய முறையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வேறு ஆவணங்கள் இதற்கு கேட்கப்படவில்லை.
மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி இருந்தும் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியினை அளித்துள்ளார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications