ஆஹா! உங்களுடன் ஸ்டாலின் முகாமில்.. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு.. அடிக்கும் ஜாக்பாட்
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாமின் முதல் வாரத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த பலரும் தங்களுக்கு முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுக்க தொடங்கி உள்ளன. இதை அரசு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் செய்தால் 45 நாட்களில் அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படி பார்க்கும் பட்சத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாமின் முதல் வாரத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் பதில் கிடைக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, அவர்கள் தகுதி உள்ளவர்களா இல்லையா என்பது ஆகஸ்ட் மாத இறுதியில் தெரிய வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின்
தொடக்கத்திலேயே விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் இனி விண்ணப்பம் செய்பவர்கள் எல்லோரையும் சேர்த்து மொத்தமாக டிசம்பரில் இருந்தே மகளிர் உரிமை தொகை புதிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன.
ஏனென்றால் நவம்பர் மாதம் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் நவம்பரில் விண்ணப்பம் செய்பவர்கள் என்று எல்லோரையும் சேர்த்தே மொத்தமாக திட்டம் டிசம்பரில் விரிவாக்கப்படும். இதனால் கடந்த மாதம் விண்ணப்பம் செய்தவர்கள் கூட இந்த வருட கடைசி வரை காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே உங்களுடன் ஸ்டாலின் முகாமின் முதல் வாரத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த பலரும் தங்களுக்கு முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுக்க தொடங்கி உள்ளன.
முதலிலேயே விண்ணப்பம் செய்தவர்களை டிசம்பர் வரை காத்திருக்க வைக்காமல்..
மகளிர் உரிமை தொகை
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களில் இதுவரை சுமார் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில், மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி மட்டும் 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மனுக்கள் பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த திட்டத்தின் கீழ் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்திற்கு வெறும் ஐந்து ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகளிர் உரிமை தொகை உங்களுடன் ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் பத்து நிமிடங்களில் அனைத்து பணிகளும் முடித்துத் தரப்படுகின்றன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, எளிய முறையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வேறு ஆவணங்கள் இதற்கு கேட்கப்படவில்லை.
மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி இருந்தும் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியினை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications