கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கொடுங்க.. நிர்மலா சீதாராமனிடம் கோரிய தங்கம் தென்னரசு!
டெல்லி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு தனது பங்குத் தொகையான ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரி சலுகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த மத்திய பட்ஜெட் தயாரிப்பின் ஒரு பகுதியாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக அரசு சார்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். அப்போது தமிழக தேவைகள் மற்றும் பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டது.

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை மெட்ரோ திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு தொகையான ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும். அதேபோல் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களை மறுபரிசீலனை செய்து மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 31 சதவிகிதம் அமெரிக்காவுடன் நடைபெறுகிறது.
அதனால் அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச் சலுகை வழங்க வேண்டும். ஜவுளித்துறைக்கான பிரத்யேக ஆதரவு தொகுப்பை அறிவித்திட மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் தர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் 2024-25, 2025-26 ஆகிய இரு ஆண்டுகளுக்கான சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் ரூ.3,548 கோடியை நிபந்தனையின்றி மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி சீரமைப்பினால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசுகள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்கான ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி -ஒசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேக திட்டங்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications