'₹' பதில் 'ரூ'.. குறியீட்டு வாதம் மட்டுமல்ல, இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய ரூபாய் சின்னத்தை நீக்குவது தேசிய ஒற்றுமை குறித்த உறுதியை பலவீனப்படுத்துவது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லட்சினையை நிராகரிப்பது மட்டும் இன்றி ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் திமுக புறக்கணித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 'பட்ஜெட்' ஆவணத்தில் இந்தியா ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டிருப்பது பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

tamil nadu budget 2025 Nirmala Sitharaman 2025

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டிற்கான இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில், 'சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட' என்ற வாசகத்துடன், "2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, எல்லார்க்கும் எல்லாம்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீடுக்கு பதிகாக 'ரூ' என்ற இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மும்மொழிக்கொள்கை விவகாரம் மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு ரூ இலச்சினையை பயன்படுத்தியது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுகவிற்கு (@arivalayam) உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு @INCIndia தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

தமிழக இளைஞரின் படைப்பு புறக்கணிப்பு

'₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது. இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.

தேசிய ஒற்றுமை உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது

'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது. ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் '₹' போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.

இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+