மத்திய அரசு தந்த 2 ஆப்ஷன்.. இரண்டில் ஒன்றை உடனே தேர்வு செய்யுங்கள்.. பென்ஷன் முறையில் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை இப்போதும் குறைவாகவே உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் இத்திட்டத்திற்கு மாற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 1 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் இந்த திட்டத்திற்கு மாறி உள்ளனர்.

jobs job old pension scheme pension

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - விளக்கம்

மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த இந்தத் திட்டம், ஓய்வூதியப் பாதுகாப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக வடிவமைக்கப்பட்ட யுபிஎஸ், அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறை, ஊழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான தகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.

பென்சன் திட்டத்திற்கு மாற வாய்ப்பு

நிதி அமைச்சகம் இம்முடிவை அறிவித்துள்ளது. ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வரை இந்த திட்டத்திற்கு ஊழியர்கள் இடையே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. UPS திட்டம் ஏப்ரல் 1, 2025 அன்று அமலுக்கு வந்தது.

முதலில், ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருந்த ஊழியர்கள், தகுதியான ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் ஜூன் 30 வரை தேர்வு செய்ய அவகாசம் பெற்றனர். பின்னர் இது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். யுபிஎஸ் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற, 25 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.

10 ஆண்டுகளுக்குக் குறைவான சேவை காலம் கொண்டவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை காலம் கொண்டவர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். யுபிஎஸ் திட்டத்தின் கீழ், 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் போது மாதம் ரூ.10,000 என்ற உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

2025 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசில் பணியில் சேர்ந்தவர்கள் தங்கள் படிவங்களை நேரிலோ அல்லது பயிற்சி நிலையத்தின் தலைவரிடமோ சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்கள் DDO-வுக்கு அனுப்பப்பட்டு, PRAN (நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்) உருவாக்கப்படும்.

மத்திய நிதி அமைச்சகம், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) இருந்து தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) ஒருமுறை மட்டுமே மாறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடம் முன்னதாகவோ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவோ இந்த மாற்றத்தை மேற்கொள்ளலாம். ஒருமுறை ஓய்வூதிய முறையை மாற்றிய பிறகு, மீண்டும் அதை மாற்ற முடியாது.

பணி நீக்கம் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கை போன்றவற்றை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த வசதி பொருந்தாது. ஒருமுறை இந்த மாற்றம் செய்யப்பட்டால், ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்களுக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள். அரசு வழங்கும் 4% கூடுதல் பங்களிப்பு, வெளியேறும் நேரத்தில் ஊழியரின் என்.பி.எஸ் கணக்கில் சேர்க்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+