Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய பட்ஜெட் 2026.. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? முழுமையான லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில்.. முக்கிய அறிவிப்புகள் தமிழ்நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அறிவிப்புகள் இன்று வெளியாகின.

போக்குவரத்து, கனிம வளம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Union Govt Budget 2026 What are the schemes announced for the Tamil Nadu

அதிவேக ரயில்

தமிழகத்தின் நீண்ட கால எதிர்பார்ப்பான அதிவேக ரயில் (High-Speed Rail) திட்டத்திற்கு இந்த பட்ஜெட் பச்சைக்கொடி காட்டியுள்ளது. நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 7 அதிவேக ரயில் வழித்தடங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவின் பொருளாதார மையங்களை இணைப்பதோடு, பயண நேரத்தையும் பாதியாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்: உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையமாக மாற்றம்

தமிழகத்தின் தொன்மை வரலாற்றைப் பறைசாற்றும் ஆதிச்சநல்லூர், இந்தியாவின் 15 முக்கிய தொல்லியல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, ஒரு "கலாச்சார மையம்" (Experiential Cultural Center) அமைக்கப்படும். அகழ்வாராய்ச்சிப் பகுதிகளை மக்கள் நேரடியாகப் பார்க்கும் வகையில் நடைபாதைகள் மற்றும் நவீன டிஜிட்டல் விளக்க மையங்கள் உருவாக்கப்படும். இருப்பினும், தமிழக அரசு முன்னெடுத்து வரும் கீழடி தளம் குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரிய கனிம வழித்தடம் (Rare Earth Corridor)

இந்தியாவின் எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகளுக்காக, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் "அரிய கனிம வழித்தடம்" அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மின்சார வாகனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான முக்கிய கனிமங்களைச் சுத்திகரித்து உற்பத்தி செய்யும் மையமாக தமிழகம் மாறும். இது தவிர, ஒடிசாவின் தால்சேர் முதல் தமிழகத்தின் ஆம்பூர் வரை ஒரு பிரத்யேக உள்நாட்டு நீர்வழிப் பாதை (Inland Waterway) அமைக்கவும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த, பழவேற்காடு ஏரியில் மூன்று புதிய பறவை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பொதிகை மலையில் சூழல் நட்பு மலையேற்றத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். வேளாண் துறையைப் பொறுத்தவரை, கடற்கரைப் பகுதிகளில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் பழைய தென்னை மரங்களுக்குப் பதிலாக அதிக மகசூல் தரும் புதிய கன்றுகள் நடப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.

திருப்பூர்

அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் நெருக்கடியில் இருக்கும் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 'ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம்' ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியால், திருப்பூரின் ஒரு ஆடையின் விலை 10 டாலரிலிருந்து 16 டாலராக உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட, உற்பத்திச் செலவு குறைக்கப்படுகிறது‌. நவீன இயந்திரங்கள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்கள் மூலம் உற்பத்திச் செலவு குறையும் போது, வரி விதிப்பையும் மீறி இந்திய ஆடைகள் உலகச் சந்தையில் போட்டி போட முடியும்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

அதிவேக ரயில் மற்றும் ஆதிச்சநல்லூர் போன்ற அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசு கோரியிருந்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான கூடுதல் நிதி குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது தமிழக மக்களிடையே கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+