சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.. 2024 தேர்தல் ஆட்டம் “ஸ்டார்ட்”! தமிழகத்தில் வெல்லுமா “ஆபரேசன் சவுத்”
சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னைக்கு வந்து இருக்கிறார். வேலூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
2024 லோக் சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. இந்த நிலையில் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி உள்ளது. அந்த வகையில் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் தென்னிந்திய மாநிலங்களை அக்கட்சித் தலைவர்கள் குறிவைக்கத் தொடங்கி உள்ளார்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை முன்வைத்தார். தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தொடர்ந்து வருகை தருகிறார்கள்.
இந்த நிலையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் பறிகொடுத்தது. இமாச்சல், கர்நாடகா என அடுத்தடுத்து கட்சி 2 மாநிலங்களை காங்கிரஸிடம் பறிகொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதே அக்கட்சி தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில்தான் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார். அவருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உள்ளிட்டோர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.

2 நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும், இருவரையுமே அமித்ஷா சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த தமிழ்நாடு பயணத்தில் வேலூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். அதேபோல் கட்சியின் மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications