வேலூரில் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம்.. தமிழகம் வருகிறார் அமித்ஷா.. பயண தேதியில் மாற்றம்
சென்னை: பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 11 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். வேலூரில் நடைபெறும் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜக கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் வேலூரில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. வேலூர் பள்ளிக்கொண்டா அருகே கந்தநேரியில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, விகே சிங் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கபட்டு இருந்தது. இந்த நிலையில், அமித்ஷாவின் தமிழக பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது வரும் 8 ஆம் தேதிக்கு பதிலாக 11 ஆம் தேதி வேலூருக்கு அமித்ஷா வருகை தர உள்ளார்.
இதன்படி வேலூரில் வரும் 11 ஆம் தேதி பாஜக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகளும் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். தமிழ்நாடு பாஜக தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில், அமித்ஷாவின் தமிழக பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வியூகம், பாஜகவை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் அமித்ஷா இந்த பயணத்தின் போது ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications