Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா இப்படி ஒரு சவாலை எதிர்கொண்டு இருக்க மாட்டார்.. தமிழகத்தில் பாஜக தடுமாறுகிறதா? சிதறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் பாஜக கிட்டத்தட்ட திணறுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் அரசியலில் அசால்ட்டாக சிக்ஸர் அடிக்கும் அமித் ஷா.. தமிழ்நாட்டில் மட்டும் சிங்கிள் கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித் ஷாவின் திட்டங்களை.. பாஜகவின் திட்டங்களை காலி செய்வது என்னவோ திமுக கிடையாது.. மாறாக பாஜக உடன் இருப்பவர்களும், இருந்தவர்களும்தான்.. அப்படி என்னதான் நடக்கிறது?

சமீபத்தில் அகமதாபாத் மாநகராட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வென்றதைக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வலுவான வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 2014 மக்களவை முதல் 2025 வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க. தொடர் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது என்றார்.

மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலின் தயாராக இருக்க வேண்டும். பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வின் நேரம் இது. பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதியுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்குத் தலைவர்களோ, கொள்கைகளோ இல்லை என்றார். திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக-வைக் குறிப்பிட்டு, "தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் அவர்கள் அடியோடு துடைத்தெறியப்படுவார்கள்," என உறுதிபடக் கூறினார்.

Union Minister Amit Shah is struggling to control BJP AIADMK and Narrative in Tamil Nadu elections

உண்மை நிலவரம் என்ன? பாஜக திணறுகிறதா?

அமித் ஷா என்னதான் உறுதியாக பாஜக கூட்டணி வெல்லும் என்று கூறினாலும் அரசியல் நிலவரமும்.. தற்போதைய அரசியல் சூழ்நிலையும் வேறுமாதிரியே உள்ளதாக தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பாஜக உண்மையில் அடித்து ஆடுகிறதா? ஆடத்தெரியாமல் ஆடுகிறதா என்ற கேள்விதான் எழுந்துள்ளது.

1. அதிமுக கூட்டணி மட்டும்தான் பதிலா? - முதலாவதாக தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவோடு கூட்டணி வைத்ததை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. இந்த கூட்டணியிலும் வேறு யாரும் சேரவில்லை. தேமுதிகவை சேர்க்க முடியவில்லை, பாமகவை சேர்க்க முடியவில்லை.. சேர்ப்பதாக இருந்தாலும் எந்த பாமக அணியை சேர்ப்பது என்று தெரியவில்லை.

2. விஜய் குழப்புகிறார் - விஜய் கூட்டணிக்கு வருவதாக தெரியவில்லை. விஜய் பாஜக கூட்டணிக்கு வந்தால் இந்த கூட்டணி பெரிதாக வெல்லும் வாய்ப்புகள் கூட உள்ளன. ஆனால் விஜய் பாஜக கூட்டணிக்கு வரும் வாய்ப்புகளே இல்லை.

3. அதிமுக ஒருங்கிணைப்பு இல்லை - பாஜக கூட்டணி வெல்ல அதிமுக ஒருங்கிணைப்பு அவசியம். ஒருங்கிணைந்த அதிமுக இல்லாமல் திமுகவை என்டிஏ வீழ்த்த முடியாது. ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இன்னும் இணைப்பு நடக்கவில்லை. அமித்ஷா சொல்வதை எடப்பாடி கேட்பதாக தெரியவில்லை. இன்னொரு பக்கம் செங்கோட்டையனே அமித்ஷா பேச்சை கேட்காமல் தவெக போய்விட்டார். எடப்பாடி அதிமுகவும் பலகீனப்பட ஆரம்பித்துள்ளது.

4. அதிமுக உடைகிறது - இன்னொரு பக்கம் அதிமுகவில் உள்ள மற்ற சிலரும் கூட உடைந்து வெளியே போவதாக செய்திகள் வருகின்றன. வைத்திலிங்கம், மாபா பாண்டியராஜ் ஆகியோர் தவெக செல்வதாக செய்திகள் வருகின்றன. அதையாவது அதிமுக தடுக்குமா.. இல்லை அமித் ஷா பிரஷர் போட்டு தடுப்பாரா என்ற கேள்வி உள்ளது. முன்பெல்லாம் அமித் ஷா ஏதாவது ஆக்சன் எடுப்பார் என்று பயந்தே அதிமுகவில் பல தலைகள் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தனர். ஆனால் செங்கோட்டையனின் துணிச்சல் மற்ற தலைவர்களுக்கும் ஒரு தைரியத்தை கொடுத்துள்ளது.

5. டிடிவி தினகரன் - இன்னொரு பக்கம் டிடிவி தினகரனின் அமமுகவும் அமித் ஷா பேச்சை கேட்பதாக இல்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணி இல்லை என்று டிடிவி தினகரன் கூறிவிட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இவர்கள் மனசு மாறி அதிமுகவுடன் நெருக்கம் ஆனாலும் அவர்களை எடப்பாடி ஏற்றுக்கொள்வது சந்தேகம்தான். இங்கும் அமித் ஷாவின் சாணக்யத்தனம் தோற்று வருகிறது.

6 பாஜக சந்தேகம் - பாஜக உள்ளே நிலைமை சரியாக இருக்கிறதா என்றால் அதுவும் சந்தேகம்தான். நயினார் பெரிய நம்பிக்கையோடு தலைவராக்கப்பட்டார்.. ஆனால் அவர் வந்த பின்பே NDA கூட்டணியில் ஏகப்பட்ட களேபரம் ஏற்பட்டது. டிடிவி, ஓபிஎஸ் வெளியேறியது எல்லாம் அவர் வந்த பின்புதான். திருப்பரங்குன்றம் விவகாரத்தை கூட அவரால் பெரிதாக்க முடியாமல் போய்விட்டது. வேறு வழியின்றி மீண்டும் அண்ணாமலையை அமித் ஷா டெல்லிக்கு அழைக்கும் நிலைக்கு சூழல் சென்றுவிட்டது.

மற்ற மாநிலங்களில் சிக்ஸர் மேல் சிக்ஸர் அடிக்கும் அமித் ஷா.. தமிழ்நாட்டில் இன்னமும் ஸ்கோர் போர்டை தொடங்காமல் இருப்பது பாஜக உள்வட்டாரத்தில் மட்டுமன்றி அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

நீங்களே உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. அமித் ஷா என்ன செய்தால் பாஜக கூட்டணிக்கு பலம் சேர்க்கும்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+