சென்னை வரும் அமித் ஷா.. நயினார் நாகேந்திரன் டீமுடன் மீட்டிங்.. தனியறையில் நடக்கும் பேச்சுவார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூலை 8ஆம் தேதி சென்னை வரவுள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டீமுடன் சந்திப்பு நடத்த உள்ளது தெரிய வந்துள்ளது. இதன்பின் பாஜகவின் மூத்த நிர்வாகிகளை தனியறையில் சந்திக்கும் அமித்ஷா, ஒவ்வொருவரிடமும் கருத்துகளை கேட்க உள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வரவுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதன்பின் 2 வாரங்களுக்கு முன்பாக மதுரை வந்த அமித்ஷா, தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Union Minister Amit Shah to Visit Chennai on July 8 To Hold Private Meetings with BJP Leaders

தமிழக தேர்தல்

அப்போது பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார். இதன்பின் மதுரையில் இருந்து புறப்படும் போது, இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவேன் என்று பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா கூறி இருக்கிறார். இதன் மூலமாக தமிழக சட்டமன்றத் தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்து கொண்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

திமுகவின் எழுச்சி

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலமாக தமிழக அரசு வெற்றிபெற்றது, நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக இருப்பது பாஜகவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாடு பாஜகவின் ஒவ்வொரு நகர்வுகளையும் அமித்ஷா கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

பாஜக கூட்டணி

அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றாலும் 30 முதல் 35 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்று அமித்ஷா கூறியதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். அதேபோல் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் பயணித்த கட்சிகளை மீண்டும் இணைக்கும் பொறுப்பையும் அமித்ஷா எடுத்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

நயினார் நாகேந்திரன் குழுவுடன் மீட்டிங்

ஏனென்றால் பாமகவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை வரும் அமித்ஷா, இம்முறை நயினார் நாகேந்திரன் தேர்வு செய்துள்ள துணைத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். தேர்தல் நெருங்குவதால், அதிகளவில் மாற்றங்களை செய்ய வேண்டாம் என்று நயினார் நாகேந்திரனிடம் கடந்த முறையே கூறி இருக்கிறார்.

தனியறையில் ஆலோசனை

அதற்கேற்ப ஒரு பட்டியலை நயினார் நாகேந்திரன் தயார் செய்து பாஜக தலைமைக்கு கொடுத்துள்ளார். இவர்களை சந்திக்கவே அமித்ஷா சென்னை வரவுள்ளார். இவர்களை சந்தித்த பின், பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை நேரில் தனியறையில் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளார். அதன்பின் அடுத்தக்கட்ட திட்டத்தை அமித்ஷா கூறுவார் என்று பார்க்கப்படுகிறது.

கூட்டணி உறுதி?

அதேபோல் ஜூலை மாதம் அமித்ஷா வந்தாலும், இம்முறை கூட்டணியை உறுதி செய்வாரா என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் எல்.முருகன் செப்டம்பர் மாதத்தில் பாஜக கூட்டணி முழுமை அடையும் என்று கூறி இருக்கிறார். அதனால் இந்த முறை பாஜகவினர் உடனான ஆலோசனைக்காக மட்டுமே அமித்ஷா வருவதாக கமலாலயத்தில் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+