திமுகவின் முக்கிய தலைவர்களுடன் பேசி வருகிறோம்.. விரைவில் பாஜகவில் இணைவார்கள்.. எல்.முருகன் அப்டேட்!
சென்னை: திமுகவில் உள்ள முக்கியமான தலைவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்து வருவதாக விமர்சித்துள்ள எல்.முருகன், விரைவில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கமலாலயம் நோக்கி வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டணிக்குள் இன்னும் சில கட்சிகளைக் கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் பாமக இருந்து வருகிறது. ஏற்கனவே பாஜக மேலிடம் தரப்பில் அன்புமணியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதனால் தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பாஜக பேசி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறி இருந்தார். செப்டம்பர் மாதத்தில் அந்த கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மாறி மாறி பேசி வருவது அவர் நிலையாக இல்லை என்பதையே காட்டுகிறது. தூய்மைப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்களாகவே வைத்திருக்காமல், அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை திருமாவளவன் பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துக் கொண்டு இருக்கிறார். பட்டியலின மக்கள் நலனில் திருமாவளவனுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை. பட்டியலின மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், கடந்த 5 ஆண்டுகளில் திருமாவளவன் என்ன செய்திருக்கிறார்? அவர்கள் குறித்து எந்த கவலையும் இல்லை. அவருக்கு திமுக கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
அந்த கூட்டணியில் இருந்து எம்பி, எம்எல்ஏ-க்களாக வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள். பட்டியலின மக்களுக்காக எல்லோரும் குரல் கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருப்பதால், திருமாவளவனிடம் கேள்வி கேட்கிறோம். அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் வலிமையாக இருக்கிறோம். 2026ஆம் ஆண்டில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறோம்.
திமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கப் போகிறது. தேர்தல் நேரத்தில் அது உங்கள் அனைவருக்கும் தெரியும். திமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள். அவர்கள் யாரென்று சொல்ல முடியாது. கமலாலயத்தில் வந்து இணையும் போது, உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். நிச்சயமாக திமுகவின் மிகப்பெரிய தலைவர்கள் எங்களுடன் வந்து இணைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications