அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? விஜய்யும் RSSல் சேரணும்.. எல்.முருகன் ரிப்ளை
சென்னை: "அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு?" என ஆர்.எஸ்.எஸ் கையில் அதிமுக உள்ளது என தவெக தலைவர் விஜய் வைத்த விமர்சனத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துகளை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்ஸை பார்த்து த.வெ.க தலைவர் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் எல்.முருகன்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்திகொண்டாடினார். இந்த நிகழ்வை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்ள கூடாது. முதலமைச்சர் பக்ரீத், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால், இந்துக்களை மட்டும் ஒதுக்கி வைக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கூற வேண்டும். இது எனது விருப்பம்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் கேரளாவில் நடக்கும் ஐயப்பன் பக்தர்கள் பூஜையில் கலந்துகொள்வது குறித்த கேள்விக்கு, "முதலமைச்சர் நாடகம் போடுகிறார். இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல், இந்து மதம் மீது நம்பிக்கை இல்லாத அவர் கேரளாவில் நடக்கும் ஐயப்ப பக்தர்கள் பூஜையில் கலந்து கொள்ளக்கூடாது. அவரது வருகைக்கு ஐயப்ப பக்தர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்" என்றார்.
பாஜகவை போல் அதிமுகவையும் ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, "ஆர்.எஸ்.எஸ் என்பது சமூக சேவைக்கான இயக்கம். நூற்றாண்டு கண்ட இயக்கம். இந்த இயக்கம் குறித்து ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரும் பேசியுள்ளனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட இயக்கம் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு? முதலில் விஜய்தான் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் மூலம் விஜய் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்!












Click it and Unblock the Notifications