Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்காக நேரத்தை செலவிட்டுள்ளார்! நடிகை கவுதமியின் புகாரை விசாரிப்போம்.. எல். முருகன் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுதமியின் புகார் குறித்து விசாரிப்போம் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், நடிகை கவுதமி பாஜகவிற்காக அவருடைய நேரத்தை செலவிட்டுள்ளார். எனவே அவர் கூறிய புகார் குறித்து விசாரிப்போம். பாஜக கொடி கம்பம் அகற்றும் விவகாரத்தில் தமிழக பாஜகவினரை தாக்கிய தமிழக அரசை கண்டிக்கிறேன்.

Union Minister L Murugan says that he will definitely inquire about gautamis complaint

தமிழக பாஜகவினர் கொடூரமாக தாக்கப்படுவதை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்.

பாஜகவில் 25 ஆண்டுகளாக இருந்த கவுதமிக்கு நிர்வாகி அழகப்பன் அறிமுகமாகியுள்ளார். அவரது குடும்பத்தினரான மனைவி, மருமகள், மகன் எல்லாரும் கவுதமிக்கு அனுசரணையாக பேசியதால் கவுதமியும் அவர்களை நம்பியுள்ளார். இதனால் தனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்டையூரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்று தருமாறு கவுதமி கேட்டிருந்தார்.

அந்த பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் நினைத்துள்ளார். இதனால் நம்பிக்கைக்குரிய அழகப்பனை அணுகியுள்ளார். அவரும் தனக்கு தெரிந்த அண்ணாநகர் 6ஆவது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபர் பலரான், செங்கல்பட்டு மகிந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோரை கவுதமிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இருவரும் சேர்ந்து அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அந்த நிலத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணமாக கவுதமி எழுதி கொடுத்தார். பின்னர் அந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக அந்த இருவரும் கவுதமியிடம் தெரிவித்தனர். மேலும் நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கவுதமியிடம் கையெழுத்து பெற்றனர்.

இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு கவுதமி மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ரூ 4.10 கோடிக்கு விற்பனையானதாக பலராமனும் ரகுநாதனும் சொன்னதன் பேரில் கவுதமி ரூ.65,31,500 வரி கட்டியுள்ளாராம். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.

Union Minister L Murugan says that he will definitely inquire about gautamis complaint

வருமான வரித் துறை கடிதத்தால் சந்தேகம் அடைந்த கவுதமி சொத்து விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போதுதான் 8.16 ஏக்கர் நிலத்தை 2016ஆம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூ 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் 4.10 கோடியை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 7,07,38,908 பணத்தை மூவரும் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கவுதமி, தான் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் தன்னை ஏமாற்றிய அழகப்பன மீது, தான் போலீஸில் புகார் அளித்த போதிலும் பாஜக தலைவர்கள் அவருக்குத்தான் உதவுகிறார்கள். எனக்கு பாஜக தலைவர்கள் யாரும் உதவவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+