இவ்வளவு லட்சமா? யூடியூப்பில் சம்பாதிக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி! மாத வருமானம் இதுதான்! செம
சென்னை: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அரசியல் மட்டுமின்றி யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தான் யூடியூப் மூலம் கிடைக்கும் மாதவருமானம் குறித்து அவர் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
தற்போதைய சூழலில் பலரும் யூடியூப்பில் சேனல் தொடங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர். தங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமையை வீடியோ பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக சமையல்கலை, சுற்றுலா, புதிய தொழில்நுட்பம், ஹோட்டல் ‛ரிவ்யூ' சார்ந்த விஷயங்களை யூடியூப் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ஷார்ட் பிலிம் போன்ற தொடர்களையும், வேடிக்கையான நிகழ்வுகளையும் தங்களின் நடிப்பு மூலம் யூடியூப்பில் பதிவிடுகின்றனர்.

இவ்வாறு யூடியூப் சேனலில் பதிவிடும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவர்களால் அதிகம் பார்க்கப்படும்போது வருமானம் கிடைக்கிறது. அதன்படி தற்போது பலரும் யூடியூப் சேனல் தொடங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் தான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் யூடியூப் சேனல் தொடங்கி மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?.
ஆம் இந்தியாவில் நன்கு அறியப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவராக உள்ள பாஜகவின் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்காரி. ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து அரசியலில் நுழைந்த அவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் தான் நிதின் கட்காரி கடந்த 2015ம் ஆண்டு யூடியூப்பில் சேனல் ஒன்றை தொடங்கினார். முதலில் அதில் அதிகமாக அவர் வீடியோக்களை பதிவிடவில்லை. இருப்பினும் கொரோனா காலத்தில் அவர் அதிக வீடியோக்களை பதிவேற்றம் செய்ய தொடங்கினார். கொரோனா பரவல் வேளையில் ஆன்லைன் மூலம் பல்வேறு கல்லூரிகளின் கருத்தரங்குகளில் நிதின் கட்காரி பங்கேற்றார். அந்த வீடியோக்களை அவர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்தார்.

மேலும் தனது பேட்டி, பேச்சு உள்பட தான் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவரது யூடியூப் சேனலை இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளில் உள்ள இந்தியர்களும் ‛சப்ஸ்க்ரைப்' செய்து வீடியோக்களை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதின் கட்காரி தனது யூடியூப் சேனல் பற்றியும், அதன் வருமானம் குறித்தும் பேசினார். இதுதொடர்பாக நிதின் கட்காரி கூறியதாவது:
‛‛இந்த நாட்டில் நிதின் கட்காரிக்கு ஒரு பைசா கமிஷனாக கொடுத்தேன் என யாரும் கூறிவிட முடியாது. அப்படி கூறினால் நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவேன். என்னை பொறுத்தவரை அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான தொழில் அல்ல. நான் எனது யூடிப்பில் இருந்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறேன். கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். நான் இந்தி, மராத்தி, ஆங்கிலத்தில் புலமையுடன் உள்ளேன். எனது பேச்சை இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவில் இருப்பவர்களும் கேட்கிறார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications