கிருஷ்ணகிரியில் யார் பாருங்க? பாஜக அசரலயே.. தமிழகத்தை வட்டமிடும் தலைகள்.. சுற்றிசுழலும் வேட்பாளர்கள்
சென்னை: தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடையும் நிலையில், பாஜகவின் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் தீவிரமாகி வருகின்றன.. அந்தவகையில், ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா போன்ற தலைவர்கள் இன்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் இன்று பிரச்சாரம் செய்கிறார்... கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி ராஜ்நாத் சிங், அவா் அங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

விமான நிலையம்: மறுபடியும் ஹெலிகாப்டரில் பெங்களூர் செல்லும் அவர், அங்கிருந்து சென்னை விமான நிலையம் வரவுள்ளாா். கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் மாலை 3 மணி அளவில் பல்வேறு சமுதாய தலைவா்களுடன் கலந்துரையாடுகிறார்.
தொடா்ந்து, ஹெலிகாப்டரில் திருவண்ணாமலைக்கு செல்லும் ராஜ்நாத் சிங், பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமனுக்கு ஆதரவாக மாலை 4 மணிக்கு சாலை வாகன பிரச்சார பேரணியில் ஈடுபடுகிறார். மறுபடியும் சென்னைக்கு ஹெலிகாப்டரில் வரும் அவா், தாம்பரத்தில் தமாகா வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரச்சார பேரணியில் கலந்து கொள்கிறார்.
ராமநாதபுரம்: அதேபோல, ராமநாதபுரம் எம்பி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, பாஜக தேசய தலைவர் நட்டா இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, பரமக்குடியில் தனியார் பள்ளி மைதானத்தில், ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி கிருஷ்ணா திரையரங்க பகுதி, மதுரை ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, சந்தைகடைதெரு பகுதிகளில் மூத்த தலைவர் நட்டாவின் "ரோடு ஷோ" நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
திடீர் ரத்து: இதனிடையே, உதகையில், இன்று நடைபெற இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications