புதியவர்கள், பெண்களுக்கு வாய்ப்பு.. மத்திய அமைச்சரவை மாற்றம்.. இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு?
சென்னை: மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. புதிய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
பிரதமரின் அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவியில் 53 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். இதில், 9 தனி அதிகாரம் கொண்ட இணை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் உள்ளனர். இதனால் காலியாக உள்ள 28 இடங்களை இதில் நிரப்ப வேண்டும்.
சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய காட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அக்கட்சிகளிடம் இருந்த அமைச்சர் பொறுப்புகள் காலியாகி உள்ளது. அதேபோல் எல்ஜேபி கட்சி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் மரணம், பாஜக அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம் காரணமாக மேலும் சில காலியிடங்கள் மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளன.

காலி இடம்
இந்த காலி இடங்களை நிரப்பும் வகையிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய அமைச்சரவை தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆலோசனை செய்தனர். இது தொடர்பாக பாஜக மேலிடம் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டது.

தயார்
இந்த நிலையில் இறுதி பட்டியல் இன்று தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பல அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இளமை
இந்தியாவிலேயே மிகவும் இளமையான மத்திய அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெண் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மிக குறைந்த வயது கொண்ட எம்பிக்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஓபிசி பிரிவை சேர்ந்த எம்பிக்கள் பலர் அமைச்சராக உள்ளதாக தகவல் வருகிறது.

யார்
அதேபோல் பிஎச்டி, எம்பிஏ படித்தவர்கள் பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கபட உள்ளதாக தகவல். எல்லா மாநிலங்களுக்கும், இந்தியாவின் அனைத்து பிரிவிற்கும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக அமைச்சரவை இருக்கும். அடுத்த வருடம் நடக்க உள்ள உ.பி தேர்தல் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மையமாக வைத்து அமைச்சரவை உருவாக்கப்படும் என்கிறார்கள்.

லிஸ்ட்
எம்பி ஜோதிராத்திய சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சார்பானந்தா சோனோவால், எல்ஜேபி கட்சியின் பஷுபதி பராஸ், பாஜக எம்பி நாராயண் ரானே, வருண் காந்தி ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். அதேபோல் தினேஷ் திரிவேதி, ஜிதின் பிரசன்னா போன்ற பாஜகவின் இணைந்த புதிய இளம் தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications