அமீரகத்தில் கோடீஸ்வர குடும்பங்களுக்கு பெரிய செக்.. வருகிறது மிக முக்கிய கட்டுப்பாடு.. என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணக்கார குடும்பங்கள், பணக்கார நிறுவனங்களுக்கு முக்கிய கட்டுப்பாடு ஒன்று வரப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களும் உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அரபு அமீரகத்தில் இருக்கும் எண்ணெய் வளங்கள் காரணமாக உலகின் பெரும் பொருளாதார வசதி கொண்ட நிறுவனங்கள் இங்கு உள்ளன.

இந்த 7 அமீரகங்களும் ஷேக் மூலம் தனி தனியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இணைந்து பெட்டரல் சூப்பர் கவுன்சில் ஆகியவை நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.

புதிய கட்டுப்பாடு

புதிய கட்டுப்பாடு

இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணக்கார குடும்பங்கள், பணக்கார நிறுவனங்களுக்கு முக்கிய கட்டுப்பாடு ஒன்று வரப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அந்த நாட்டில் பெரு நிறுவனங்கள் செய்யும் மோனோபோலியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான புதிய விதிகள் அங்கு கொண்டு வரப்பட இருக்கின்றன.

மோனோபோலி

மோனோபோலி

மோனோபோலி என்றால் ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரே நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவது. உதாரணமாக டெலிகாம் துறையில் ஒரே நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவது. மற்ற நிறுவனங்களை வளர விடாமல் தடுப்பது. புதிய நிறுவனங்களை நசுக்குவது ஆகும். இப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைய மோனோபோலி நிறுவனங்கள் உள்ளன.

மார்க்கெட்

மார்க்கெட்

முக்கியமாக மால்கள், சூப்பர் மார்க்கெட், கார் டீலர்ஷிப் துறையிலும் மோனோபோலி நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பல அங்கு இருக்கும் பெரிய ஷேக்குகள், பாரம்பரிய பணக்கார குடும்பங்கள், முன்னாள் அரச குடும்பங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தான் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கட்டுப்படுத்த உள்ளது.

புதிய விதி

புதிய விதி

புதிய விதிப்படி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வாங்கும் ஒப்பந்தங்களை ஒரே நிறுவனம் மீண்டும் மீண்டும் கைப்பற்ற முடியாது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை நேரடியாக அமீரகத்தில் விற்பனை செய்ய முடியும். பழைய டீலர்களை நம்பி இருக்க வேண்டியது இல்லை.

வெளிநாட்டு நிறுவனம்

வெளிநாட்டு நிறுவனம்

வெளிநாட்டு நிறுவனங்கள் நினைத்தால் அமீரகத்தில் புதிய டீலர்களை ஒப்பந்தம் செய்ய முடியும். புதிய சிறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும். இதனால் அமீரகத்தில் இருக்கும் பெரிய சூப்பர் மார்க்கெட் செயின் நிறுவனங்கள், கார் டீலர் நிறுவனங்களில் ஒரே குடும்பம், ஒரே குழு ஆதிக்கம் செலுத்தி வருவது முடிவிற்கு வரும்.

வெளிநாட்டு பொருட்கள்

வெளிநாட்டு பொருட்கள்

இதனால் இனி அமீரகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களை புதிய நிறுவனங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும். வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய டீலர்களை கொண்டு வர முடியும். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனால் பல பணக்கார குடும்பங்கள் அங்கு பாதிக்கும் என்கிறார்கள்.

 என்ன நிறுவனங்கள்

என்ன நிறுவனங்கள்

Majid Al Futtaim, Al Habtoor Group போன்ற பெரிய குடும்ப நிறுவனங்கள் தங்கள் டீலர்களை இழக்க நேரிடலாம். இது பல புதிய நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் தொடங்க வழி வகுக்கும். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு சீக்கிரம் வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+