தமிழகத்தில் பல்கலைக்கழக பாடத்திட்டம் மாற்றம்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் என 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதனிடையே இந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துணை வேந்தர்கள் மாநாடு

துணை வேந்தர்கள் மாநாடு

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது. இதில் அண்ணா பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 21 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

திறன் மேம்பாட்டு

திறன் மேம்பாட்டு

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உயர்கல்வித்துறை மேம்பாடு, மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றியும் துணை வேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் விரிவாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதி

உள்கட்டமைப்பு வசதி

தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் மட்டுமல்லாமல் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தருவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேசிய தர வரிசையில் தமிழகத்தை சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து சிறந்த இடத்தை தக்க வைப்பது பற்றியும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசப்படும் எனத் தெரிகிறது.

 அமைச்சர்கள் பங்கேற்பு

அமைச்சர்கள் பங்கேற்பு

அமைச்சர்கள் பொன்முடி, ம.சுப்ரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொடுள்ளனர். துணை வேந்தர்களுக்கு அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் இறையன்பு சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். இதனிடையே தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+