இன்னும் கொஞ்சம் தடைதான்.. வெகுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிய தமிழகம்.. மக்கள் ஹேப்பி!
சென்னை: கொரோனாவுக்கு மத்தியில் 5 மாதங்கள் கழித்து தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அது போல் தற்போது தடை செய்யப்பட்ட சேவைகளும் விரைவில் திறந்தால் மக்கள் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருக்கும்.
சென்னை வெள்ளம் எப்படி சென்னை புறநகர்வாசிகளின் வாழ்வை புரட்டி போட்டதோ அது போல் இந்த கொரோனாவும் உலக பொருளாதாரம் முதல் வீட்டு பொருளாதாரம் வரை அனைத்தையும் புயல் போல் புரட்டி போட்டது.
மளிகைக் கடை, காய்கறி கடை, ஹோட்டல் தொழில், கட்டுமான தொழில், மண்பாண்ட தொழில் என பெரும்பாலான தொழில்கள் முடங்கியதால் அந்த தொழிலை நடத்தி வருவோர் பெரும் நஷ்டமடைந்துவிட்டனர். அந்த தொழிலில் பணியாற்றி வருவோரும் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விமான போக்குவரத்து
உணவுக்கும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் கொரோனாவுக்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கை எப்போது கிடைக்கும் என ஏங்கியோர் பலருண்டு. மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ், பேருந்து போக்குவரத்து இல்லை, ரயில், விமான போக்குவரத்து இல்லை.

தளர்வுகள்
விடுமுறை காலங்களில் சுற்றுலாவுக்கு செல்ல முடியவில்லை. நினைத்த நேரத்தில் கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்க முடியவில்லை என்றெல்லாம் பலர் கவலையுற்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மெல்ல மெல்ல தளர்வுகளை அரசு அறிவித்தது.

தமிழக அரசு
இப்படியாக 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்து 8-ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இந்த மாதம் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் மக்களுக்கு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதில் முக்கியமானது பொது போக்குவரத்து. மாவட்டங்களுக்குள்ளேயே பொது போக்குவரத்தை இயக்க தமிழக அரசு அறிவித்தது.

மக்கள் அவதி
ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மக்கள் அவதிப்படுவதை அடுத்து இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து, ரயில் மூலம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதை பார்க்கும் போது கிட்டத்தட்ட தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.

தமிழகத்தில் இயல்பு நிலை
இதுவரை தமிழகத்தில் எதற்கெல்லாம் அனுமதி என்பதை பார்ப்போம்.
- இ பாஸ் முறை ரத்து. எனினும் மற்ற மாநிலங்களிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வருவோருக்கு இ பாஸ் அவசியம்.
- இரவு 8 மணி வரை தமிழகத்தில் இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படுகிறது.
- அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7 முதல் இயங்க அனுமதி. மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி.
- வணிக வளாகங்கள், பெரிய கடைகள், தொழிற்சாலைகள், ஐடி பூங்காக்கள், தனியார் துறைகள், அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.
- டீக்கடைகள், ரெஸ்டாரென்டுகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். இரவு 9 மணி வரை பார்சல்கள் பெற அனுமதி அளிக்கப்படுகிறது.
- கிளப்புகள், ஹோட்டல்கள், ரிசார்டுகள், தங்கும் விடுதிகள் உரிய வழிகாட்டும் நெறிமுறைகளுடன் இயங்க அனுமதி
- அனைத்து பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும் திறக்கப்படலாம். எனினும் பார்வையாளர்களுக்கு விளையாட்டு மைதானங்களில் அனுமதி இல்லை.
- ஏற்காடு, நீலகிரி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ பாஸ் பெற்றுக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
- சினிமா படப்பிடிப்புகள் 75 பேருடன் நடத்த அனுமதி
- செப்டம்பர் 15-ஆம் தேதி வரை மாநிலத்துக்குள் குறைந்த அளவிலான ரயில்கள் இயங்க அனுமதி.
- சென்னை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 50 விமானங்கள் வர அனுமதி.

அனுமதி இல்லை
- சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி இல்லை
- ஷாப்பிங் மால்களில் உள்ள மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்கள்
- பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை, அதாவது 144.
- பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை
- 10 வயதுக்குள் பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரத் தடை
- கர்ப்பிணிகள், நோய்க்கு சிகிச்சை அளிப்பவர்கள், வயதானவர்கள் வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் பணியமர்த்தக் கூடாது.
- கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி இல்லை.
- கடற்கரை, நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி இல்லை.
- திருமணம், இறப்பு சடங்குகளில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை

தமிழகத்தில் இதை செய்தால் போதும்
தற்போது தமிழகம் கிட்டதட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம். சினிமா தியேட்டர், பள்ளி, கல்லூரி, கடற்கரைகள் உள்ளிட்டவை திறந்து கடைகளின் நேரத்தையும் பழையபடி அதிகரித்தால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவர். இந்த 5 மாதத்தில் சரிந்த வாழ்வாதாரத்தை மீட்க உதவியாக இருக்கும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications