ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச்
சென்னை: தஞ்சாவூர் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கிய அதிமுக தலைமையின் முடிவு, டெல்டா அரசியல் களத்தில் ஒரு முக்கியமான நகர்வாகவே பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகளின் பலப்பரீட்சை களமாக விளங்கும் தஞ்சையில், தேசியக் கட்சியான பாஜக நேரடியாகக் களம் காண்பது ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளதாம்.. அதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல்தான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மிக முக்கியமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது தஞ்சாவூர் தொகுதி. காரணம் தஞ்சாவூர் தொகுதியில் பாஜக களமிறங்கியுள்ளது.

தஞ்சை அதிமுக தொகுதி
பொதுவாகவே திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் டெல்டா மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் மாவட்டத்தின் தலைநகரமான தஞ்சாவூர் தொகுதி தற்போது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருக்கும் கருப்பு முருகானந்தம் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் தாமரை கட்சியினர். ஏனென்றால் கருப்பு முருகானந்தம் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர். அதே நேரம், அதோடு தஞ்சாவூரின் முக்கிய புள்ளிகளுள் ஒருவரான பார்க்கப்படும் பா.ஜெய் சதீஷ்-ம் பாஜகவின் வேட்பாளர் ரேஸில் உள்ளார்.
சரவணன் ஷாக்
எது எப்படியோ தஞ்சாவூர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதில் அதிமுக லோக்கல் ரத்தத்தின் ரத்தங்கள் கொதிப்படைந்து போய் உள்ளார்களாம்.. அதிலும் தஞ்சாவூர் மாநகர செயலாளரும், கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான என்.எஸ். சரவணன் பயங்கரமான அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளன இவர், இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தனக்கு வேட்பாளராக வாய்ப்பு கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்தார்.
அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் தீவிர பக்தரான இவர், எடப்பாடி பழனிசாமி எப்போது டெல்டா மாவட்டத்திற்கு வந்தாலும் மொத்த பணிகளையும் சரவணன் தான் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். அதனால்தான் தலைமையிடத்திலும் சரவணனுக்கு தனி செல்வாக்கு உண்டு. இந்த செல்வாக்கால் வரும் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி தஞ்சாவூர் தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொகுதி முழுவதும் தீவிரமாக தேர்தல் பணி செய்து வந்தார்.
பாஜக விஐபி மாஸ்டர் பிளான்
ஆனால் அதிமுக தலைமை தஞ்சாவூர் தொகுதியை பாஜகவிற்கு தாரை வார்த்துவிட்டதால் என்ன சரவணன் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக லோக்கல் ரத்தத்தின் ரத்தங்களின் அதிருப்தி பாஜகவிற்கு எதிர்மறையாக மாறக்கூடும் என்பதுதான் கள நிலவரம்... இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரை உள்ளூர் அதிமுக தொண்டர்களை கன்வின்ஸ் செய்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உழைக்க வைக்கும் முயற்சியில் அதிமுக தலைமை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக நமக்கு பிரத்யேக தகவல்கள் கிடைக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி ஸ்மார்ட் மூவ்
எனினும், தஞ்சாவூர் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கிய அதிமுக தலைமையின் முடிவு, டெல்டா அரசியல் களத்தில் ஒரு ஸ்மார்ட் முடிவாகவே பார்க்கப்படுகிறது. காரணம், பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் பலப்பரீட்சை களமாக விளங்கும் தஞ்சையில், தேசியக் கட்சியான பாஜக நேரடியாகக் களம் காண்பது ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்ற அனுபவம் கொண்ட கருப்பு முருகானந்தம் அல்லது பா.ஜெய் சதீஷ் போன்ற உள்ளூர் முகங்களை முன்னிறுத்த பாஜக முயல்வது அந்த கட்சியின் வளர்ச்சியை நோக்கிய நகர்வாகும்.
அதிமுக - பாஜக
இருந்தாலும், திராவிட அரசியலின் வேர் ஆழமாக இருக்கும் ஒரு தொகுதியில், தாமரை மலருமா என்பது அதிமுக வழங்கப்போகும் கள ஒத்துழைப்பைப் பொறுத்தே அமையும்.
ஏனென்றால் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பும், உள்ளூர் செல்வாக்கும் இன்றி ஒரு கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது லேசுபட்ட விஷயமல்ல. தொகுதிப் பங்கீட்டில் ஏற்படும் இத்தகைய மனக்கசப்புகள் தேர்தலின் போது உள்ளடி வேலைகளாக மாறினால், அது பாஜகவின் வெற்றி வாய்ப்பை நேரடியாக பாதிக்க செய்துவிடும்..
எனவே, தனது தொண்டர்களை சமாதானப்படுத்தி, கூட்டணி தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் இப்போது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. ஒருவேளை இதில் தவறினால், டெல்டா கோட்டையில் நிலவும் இந்த உட்கட்சி பூசல் எதிர்மறையான விளைவுகளையே தரும் என்பதையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டி உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
- நமது சிறப்பு நிருபர்
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?











Click it and Unblock the Notifications