Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சென்னை + வட தமிழ்நாடு.. திமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபிப்போம்” - மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். தேர்தல் பணி என வந்துவிட்டால் திமுக தொண்டர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை" என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள் ஒருபுறம் இருக்க, பொதுக்கூட்டங்கள், ஆலோசனை என தேர்தல் களம் பரபரத்து வருகிறது.

Chennai North TN Always DMK Stronghold Says CM Stalin

திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்று வருகிறது திமுகவின் 15 கழக மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாநாடு நடைபெறுகிறது.

சென்னை, விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த 49 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “2026 தேர்தலில் கழகத்தின் வெற்றியை ஈட்டி வர இருக்கும் ஈட்டி முனைகளான வாக்குச்சாவடி முகவர்கள் உங்களைப் பார்க்கும் போது எனக்கு பூஸ்ட் கிடைத்தது போல உள்ளது. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம்.

சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். தேர்தல் பணி என வந்துவிட்டால் திமுக தொண்டர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என நான் மட்டும் சொல்லவில்லை. கழகத்தின் எதிரிகளே பல தருணங்களில் கூறியுள்ளார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்களை 5 முறை அணுக வேண்டும்; அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்குகள் கேட்க வேண்டும்.

வரலாற்றில் முதல்முறையாக தொழில்துறையில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து மாநாடு நாளை நடத்த உள்ளோம். அதிமுக ஆட்சியில் பாதாளத்தில் கிடந்த தமிழ்நாடு பொருளாதாரத்தை மீட்டு இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்துள்ளோம் என மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மீதமுள்ள கோரிக்கைகளையும் அடுத்த ஆட்சியில் நிறைவேற்றுவோம் என மக்களிடம் கூறுங்கள்.

திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல்” எனப் பேசியுள்ளார் ஸ்டாலின்.

மேலும், இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது! தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை 75 ஆயிரம்! ஒவ்வொரு பூத்திற்கும் நாம் செட் பண்ணியிருக்கும் 'மினிமம் டார்கெட்' எவ்வளவு தெரியுமா? 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை நாம் அச்சீவ் செய்தாலே, 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிடலாம்.

நான் முன்பே சொல்லியிருந்தேன். இந்தத் தேர்தலில் நாம் கட்டாயம் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் வாங்கியாக வேண்டும் என்று சொல்லிருந்தேன். இதை சாத்தியப்படுத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு! இதை எப்படி செய்வது? ரொம்ப சிம்ப்பிள்! நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 40-50 வாக்குகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! இதை சக்சஸ்-ஃபுல்லாக செய்தாலே, வெற்றி உறுதி!

எத்தனை டெக்னாலஜி வந்தாலும், எத்தனை புதிய ஊடகங்கள் வந்தாலும், ரிமோட்டில் எத்தனை பேர் நமக்காக வேலை செய்தாலும், தேர்தல் பிரசாரத்தின் பேசிக்ஸ்-தான் மிக முக்கியம்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒவ்வொருவரும் 100 வாக்காளர்களைத் தேர்தலுக்குள், குறைந்தபட்சம் 5 முறையாவது சந்தித்தாக வேண்டும்.

நான் ஏற்கனவே விருதுநகர் கூட்டத்தில் சொன்ன ஒரு விஷயத்தை, இந்தக் கூட்டத்திலும் திரும்ப அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். பரம்பரை பரம்பரையாகத் தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! தேர்தல் என்று வந்துவிட்டால், மக்கள்தான் எஜமானர்கள்! அதனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் - திட்டங்களையும், அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்து வருவதையும், ஒவ்வொருவரிடமும் விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் pro-incumbency-தான் நிலவுகிறது! ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, எங்குமே இல்லாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது! இதை அப்படியே நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றி, வெற்றியை அறுவடை செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.

2021-இல் இருந்ததைவிட, தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் கூடி இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பார்த்தால், தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 2026-லும் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும்! அதற்கு, ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.

தி.மு.க. என்ற ஆலமரத்தின் வேர்கள் நீங்கள்! அறிவாலயத்தின் அஸ்திவாரமே நீங்கள்தான்! உங்களை நம்பித்தான் மொத்தக் கழகமும் இருக்கிறது. என்னுடைய மொத்த நம்பிக்கையும் நீங்கள்தான்.

வீடு வீடாகச் சென்று இயல்பாக - சகஜமாக - உரிமையோடு பிரசாரம் செய்யுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய சாதனைகளை எடுத்துச் சொன்னீர்கள் என்றால், அவர்களே உணர்ந்து நம்மை வரவேற்பார்கள்! நண்பர்களுடன் டீக்கடையில் உட்கார்ந்து பேசுவது போன்று, ஃப்ரண்ட்லியாகப் பேசுங்கள். கலகலப்பாகப் பேசுங்கள். நம்முடைய கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும், தமிழ்நாட்டின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று அவர்கள் மனதில் பதிய வையுங்கள். குறிப்பாக இளைஞர்களிடம், அவர்களுக்காக நாம் செய்து கொண்டு வரும் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள். அவர்களின் வேலைவாய்ப்புக்காக நாம் கொண்டு வரும் தொழிற்சாலைகள் பற்றிப் பொறுமையாகச் சொல்லுங்கள்." எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+