ஆர்சி புக்.. ட்ரைவிங் லைசென்சில் உடனே போன் நம்பரை மாத்துங்க! இல்லைனா பெரிய பிரச்சனை! பறந்த வார்னிங்
சென்னை: நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கான முக்கியமான ஆவணங்கள் - ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழ் (RC Book). இந்த இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் சரியாக இல்லையெனில், எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என மத்திய போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் RC புக்கில் உள்ள மொபைல் எண்ணை உடனடியாக புதுப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில், அனைத்து அரசாங்க சேவைகளும் OTP அடிப்படையிலான ஆன்லைன் முறையில் செயல்படுகின்றன. பழைய அல்லது தவறான எண் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றை அணுக முடியாமல் போகும். அதுமட்டுமின்றி, வாகனத்தைச் சார்ந்த பல முக்கியமான தகவல்களும் SMS வழியாக அனுப்பப்படுகின்றன.
உதாரணமாக, காப்பீடு முடிவு தேதிக்கான நினைவூட்டல், சாலை வரி (Road Tax) குறித்த தகவல், மாசு சான்றிதழ் (PUC) புதுப்பிப்பு அறிவிப்பு, அபராதங்கள் மற்றும் சாலையில் விதிக்கப்பட்ட சலான்கள் பற்றிய தகவல் ஆகியவை எஸ் எம் எஸ் வாயிலாக தான் அனுப்பப்படும்.

ஓட்டுநர் உரிமம்
மேலும், சரியான எண் இணைக்கப்படாததால், யாராவது உங்கள் வாகன ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. அதேபோல், DigiLocker அல்லது mParivahan போன்ற பயன்பாடுகளில் உங்கள் வாகன ஆவணங்களை ஆன்லைனில் காணவும் சரியான மொபைல் எண் தேவைப்படுகிறது.
மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிகவும் எளிது. மத்திய போக்குவரத்துத் துறையின் Parivahan Portal-ல் சில நிமிடங்களில் அதை செய்யலாம்.
ஆர்சி புத்தகம்
முதலில், https://parivahan.gov.in தளத்திற்கு செல்லவும். அதில், "Online Services → Driving Licence Related Services" என்பதை தேர்வு செய்யவும். உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்து "Update Mobile Number" என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஓட்டுநர் உரிமை எண் (DL No) மற்றும் பிறந்த தேதி (DOB) உள்ளிடவும். புதிய மொபைல் எண்ணை பதிவுசெய்து, OTP மூலம் சரிபார்த்து Submit செய்யவும்.
மொபைல் எண் புதுப்பிப்பு
ஆன்லைன் முறையில் சிரமம் ஏற்பட்டால், அருகிலுள்ள RTO அலுவலகத்தில் சென்று, "Mobile Number Update for DL/RC" என்ற படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். ஆதார், வாக்காளர் அட்டை அல்லது பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்களையும் இணைக்க வேண்டும். RC புக்கில் எண்ணை மாற்றவும் இதே தளத்தில் "Vehicle Related Services" பகுதியில் "Update Mobile Number" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு RC எண், சேஸ் எண் மற்றும் என்ஜின் எண் (கடைசி 5 இலக்கங்கள்) ஆகியவற்றை உள்ளீடு செய்து OTP மூலம் உறுதிப்படுத்தலாம்.
எம்பாரிவகன் பயன்பாடு
புதிய மொபைல் எண், ஆதார் எண்ணுடன் பொருந்தினால் சில மாநிலங்களில் eKYC மூலம் உடனடியாக புதுப்பிக்க முடியும். மாற்றம் முடிந்தவுடன் SMS மூலம் உறுதிப்படுத்தல் வரும், மேலும் mParivahan, DigiLocker ஆகிய பயன்பாடுகளிலும் உடனே புதுப்பிக்கப்படும். உங்கள் வாகன ஆவணங்களில் சரியான மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும், அது பாதுகாப்பு, வசதி மற்றும் சட்ட ரீதியான நிம்மதியை உறுதி செய்கிறது. உடனடியாக உங்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC புக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்த்து புதுப்பித்து விடுங்கள். இல்லையெனில் நாளை பிரச்சனையை தவிர்க்க முடியாது.












Click it and Unblock the Notifications