UPIல் ரூ.2,000க்கு மேல் அனுப்பினால் கட்டணம்! அக்டோபர் 15 முதல் ரூ.300 வரை கட்டணம்? முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையில் முக்கியமான மாற்றம் வந்துள்ளது. ₹2,000க்கு மேல் மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது! எவ்வளவு சதவிகிதம் கட்டணம்.. அதிகபட்சம் எவ்வளவு கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நாட்டில் இப்போது யுபிஐ மூலமாகவே அதிகபட்ச பரிவர்த்தனைகள் நடக்கிறது. இது இத்தனை காலம் இலவசமாக இருந்து வந்த நிலையில், இதற்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக சில காலமாகவே தகவல் வெளியானது.

UPI charges above 2000

அக்டோபர் 15 முதல்

இந்தச் சூழலில் தான் என்சிபிஐ இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை கொடுத்துள்ளது. அதாவது ரூ.2000-க்கும் அதிகமான யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.2 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக பரிவர்த்தனைக்கு 0.4% UPI கட்டணம் விதிக்கப்படும். வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் யுபிஐ வணிக பரிவர்த்தனைக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமே ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 தான் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், தனிநபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு எவ்வளவு அனுப்பினாலும் கட்டணம் இல்லை.

ரூ.5 மட்டுமே

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் துறைகள், விவசாயம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000க்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5 என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். மியூச்சுவல் பண்ட், பத்திரங்கள், டிரேடிங் ஆகியவற்றுக்கு 0.02% MDR கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் அதிகபட்ச கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

யாருக்கு எவ்வளவு கட்டணம்?

புதிய விதிமுறையின்படி, ₹2,000-க்கு மேல் நடைபெறும் Person-to-Merchant (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, அதாவது நாம் வணிகர்களுக்கு செலுத்தும் பேமெண்டுகளுக்கு மட்டும் 0.4% கட்டணம் விதிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹300 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக, ₹75,000 மற்றும் அதற்கு மேல் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணமாக ₹300 வரையறுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையால் குறைந்த மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பாதிப்பு இல்லை. ₹2,000 வரையிலான அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளும் கட்டண வரம்புக்குள் வராது. நமது நாட்டில் நடக்கும் பரிவர்த்தனைகளில் 95%-க்கும் அதிகமானவை இதுதான் என்பதால் அதில் எந்தவொரு சிக்கலும் இல்லை.

விலக்கு

சிறு வணிகர்களும் இதில் விலக்கு தொடரப்பட்டுள்ளது. யுபிஐ க்யூஆர் மூலம் மாதத்திற்கு ₹1 லட்சம் வரை நேரடியாக வங்கி கணக்கில் பெறும் சிறு வணிகர்களுக்கு இதில் விலக்கு தரப்பட்டுள்ளது.

யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் நிலையில், இதற்கான செலவுகள் மற்றும் யுபிஐ தளத்தை பராமரிக்கும் செலவுகளை வங்கிகளே ஏற்று வந்தன. இருப்பினும், பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்தால் செலவுகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. அதன் காரணமாகவே யுபிஐக்கு மீண்டும் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே 0.4% கட்டணம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்னுமே கூட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் வாலெட்டுகள் போன்ற பிற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது, இந்த கட்டணங்கள் குறைவாகவே இருக்கிறது. எனவே, சாதாரண யுபிஐ பயனர்களுக்கு வழக்கம்போல இலவச சேவை தொடரும். அதேநேரம் ஹை வெல்யூ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் அமலுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+