பேடிஎம், கூகுள் பே பயன்படுத்துகிறீர்களா.. ரூல்ஸ் மாறியாச்சு.. "செக்" பண்ணிட்டு ஸ்கேன் செய்யுங்கள்
சென்னை: 2025 ஏப்ரல் 1 முதல், வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட செயலற்ற மொபைல் எண்களை யுபிஐ அமைப்பிலிருந்து தேசிய பண பரிவர்த்தனை கழகம் (NPCI) நீக்க உள்ளது.
கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள், இந்த முக்கியமான மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். 2025 ஏப்ரல் 1 முதல், நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்கள் யுபிஐ அமைப்பிலிருந்து நீக்கப்படும். பழைய அல்லது செயலிழந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். உங்கள் வங்கி கணக்கு காலாவதியான அல்லது மூடப்பட்ட எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், யுபிஐ பரிவர்த்தனைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

சைபர் மோசடி மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைக் குறைக்கவே NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. செயலிழந்த மொபைல் எண்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்ற பயனர்களுக்கு மீண்டும் ஒதுக்குவதால், பழைய எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் மோசடி அபாயம் அதிகரிக்கிறது. எனவே, வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகள் தங்கள் அமைப்புகளில் இருந்து செயலற்ற மொபைல் எண்களை வாரந்தோறும் அடையாளம் கண்டு நீக்க NPCI உத்தரவிட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, உங்கள் மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீண்ட காலமாக உங்கள் எண் செயலற்ற நிலையில் இருந்தாலோ அல்லது புதிய சிம் வாங்கிய பிறகு புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ, ஏப்ரல் 1-க்கு பிறகு யுபிஐ பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
பரிவர்த்தனைகளில் சிக்கல்களைத் தவிர்க்க
உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்கவும். அது பழையதாகவோ அல்லது செயலற்றதாகவோ இருந்தால், உடனடியாக புதுப்பிக்கவும். உங்கள் தொலைத்தொடர்பு வழங்குநரை (ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல்) தொடர்புகொண்டு, அந்த எண் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
உங்கள் எண் செயலிழந்து மீண்டும் ஒதுக்கப்பட்டிருந்தால், வங்கிக்குச் சென்று புதிய எண்ணை இணைக்கவும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளில் உங்கள் மொபைல் எண் மற்றும் வங்கி விவரங்களைப் புதுப்பிக்கவும்.
வாரந்தோறும் தரவு
செயலற்ற எண்களின் பட்டியலை வாரந்தோறும் புதுப்பிக்க அனைத்து வங்கிகளுக்கும் யுபிஐ செயலிகளுக்கும் NPCI உத்தரவிட்டுள்ளது. எனவே, உங்கள் எண் நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்தால், அது தானாகவே வங்கியின் பதிவுகளிலிருந்து நீக்கப்படலாம். எனவே, உங்கள் எண்ணை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருப்பது மற்றும் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம்.
யுபிஐ-க்கான எண்ணை எவ்வாறு சரிபார்க்கலாம்
உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் செயலியில் உள்நுழைந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும். கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் சென்று இணைக்கப்பட்ட எண்ணைச் சரிபார்க்கலாம். எண் செயலற்ற நிலையில் இருந்தால், உடனடியாக புதிய எண்ணை இணைக்கும் செயல்முறையை முடிக்கவும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications