யுபிஐ கட்டணம் ரூ.10,000க்கு ரூ.40.. யார் யாருக்கு இந்த சார்ஜ் வரும்? அன்புமணி ராமதாஸ் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: UPI-ல் ரூ.2,000-க்கு மேல் பணம் செலுத்தினால் இனி நம்ம கையில் இருந்து கூடுதல் பணம் போய்விடுமா? என்ற கேள்விதான் இப்போது பல தரப்பிலும் எழுந்து வருகிறது.. தினமும் டீக்கடை முதல் பெரிய பெரிய கடைகள் வரை யுபிஐ-ல் பணம் கட்டியே பழகிவிட்ட நிலையில், தற்போது வந்துள்ள அறிவிப்பு சாமானிய மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆனால் உண்மையில் இந்தக் கட்டணம் யாருக்கு? நமக்கா.. கடைக்காரருக்கா? இதில்தான் முழு விஷயமும் இருக்கிறது.

அக்டோபர் 15 முதல், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தும்போது, அந்தக் கடைக்காரருக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்பட உள்ளது. அப்படியானால் ரூ.10000-க்கு பொருள் வாங்கினால் நம்ம கணக்கில் இருந்து ரூ.40 கூடுதலாக போய்விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது..

UPI Charges Payment

அக்கவுண்ட்டிலிருந்து ரூ.10,000

உண்மையிலேயே, நீங்கள் ரூ.10,000 செலுத்தினால் உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து ரூ.10,000-தான் போகும். அந்த பரிவர்த்தனைக்கான சிறிய கட்டணத்தை பணத்தை பெறும் கடைக்காரர்தான் செலுத்த வேண்டும்.

இதைதான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.. யுபிஐ இப்போது மக்களின் அன்றாட பணப்பரிவர்த்தனையில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், பெரிய தொகை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வந்தால், வணிகர்கள் பெரிய தொகையை UPI-ல் பெறுவதில் தயக்கம் காட்டலாம். இதனால் மக்கள் UPI பயன்படுத்துவதையும், கடைக்காரர்கள் பெரிய தொகைக்கு UPI பணம் பெறுவதையும் குறைக்கக்கூடும் என்பதுதான் அன்புமணியின் கவலை.

அன்புமணி ராமதாஸ், ராகுல் காந்தி

அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னொரு விதமான பாதிப்பை சுட்டிக் காட்டுகிறார்.. "கட்டணம் உங்களிடம் இருந்து பிடிக்கப்படாது" என்று சொன்னாலும், கடைக்காரருக்கு அந்த செலவு வருகிறதே.. அதை அவர் எப்படி சமாளிப்பார்? இதுதான் அவரது கேள்வி.

உதாரணமாக, ஒரு கடைக்காரருக்கு தினமும் அதிக தொகை யுபிஐ மூலம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.. அதற்கு அவர் கூடுதல் பணம் செலுத்த வேண்டிய நிலை வந்தால், அந்தக் கட்டணத்தை அவர் தனது செலவாக ஏற்றுக்கொள்ளலாம். இல்லாவிட்டல் பொருளின் விலையிலேயே கொஞ்சம் சேர்க்கலாம். அப்படி விலை உயர்ந்தால், யுபிஐ கட்டணம் என்று நம்மிடம் தனியாக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றாலும், பொருளை வாங்கும்போது கூடுதலாக பணம் கொடுக்க வேண்டியது நாமாகிவிடும் என்று ராகுல் காந்தி சொல்கிறார்.

சாமானியர்களுக்கு பாதிப்பு வருமா?

அப்படியானால் சாமானிய மக்களுக்கு இப்போதே பாதிப்பு வந்துவிட்டதா? என்பதுதான் பலரது கவலையாக எழுந்துள்ளது.. உண்மையிலேயே, ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினாலும் உங்கள் கணக்கில் இருந்து தனியாக கட்டணம் பிடிக்கப்படாது..

நண்பர், உறவினர் என ஒருவருக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பினாலும் கட்டணம் இல்லை.. கடையில் ரூ.2000 வரை யுபஐ மூலம் பணம் செலுத்தினாலும் கூடுதல் கட்டணம் கிடையாது. ரூ.2,000-க்கு மேல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செய்யப்படும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்குத்தான் இந்த கட்டணம் பொருந்தும்.

எனவே, பெரிய தொகை யுபிஐ பணம் பெறும் கடைக்காரர்களுக்குத்தான் முதலில் கூடுதல் செலவு வருகிறது. அவர்கள் அந்தச் செலவை ஏற்றுக்கொண்டால் நமக்கு நேரடி பாதிப்பு இல்லை. ஆனால் அந்த செலவை ஈடுகட்ட பொருட்களின் விலையை உயர்த்தினால், அதன் சுமை நம்மிடம் வந்து சேரலாம். அதேபோல், சில கடைக்காரர்கள் பெரிய தொகைக்கு UPI வாங்காமல், வேறு முறையில் பணம் செலுத்தச் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரே வரியில் சொல்வதானால், நம்மிடம் இருந்து நேரடியாக UPI கட்டணம் வசூலிக்கப்படாது.. ஆனால் கடைக்காரருக்கு வரும் கூடுதல் செலவு, ஒருபுறம் யுபிஐ பயன்பாட்டையே பாதிக்கலாம், மறுபுறம் அந்தச் செலவு பொருளின் விலையில் சேர்க்கப்பட்டால், மறைமுகமாக சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பாதிக்கலாம். இதுதான் இப்போது இந்த யுபிஐ கட்டண அறிவிப்பைச் சுற்றி எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+