Oct 1 changes: UPI முதல் பாரத ஸ்டேட் வங்கி பரிவர்த்தனை வரை! இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியான இன்று முதல் பல்வேறு பணம் சார்ந்த விதிமுறைகளில் மாற்றம் வருகிறது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

செப்டம்பர் மாதம் முடிவடைந்து தற்போது அக்டோபரில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இன்று முதல் சில முக்கிய மாற்றங்கள் சாமானியர்களை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. அந்த வகையில் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

october 1 upi sbi 1

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சமையல் எரிவாயு விலை மாற்றப்படுவது வழக்கம். பொதுவாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இந்த முறை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்தார். ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ 66.50 காசுகள் உயர்ந்தது.

அது போல் இன்று முதல் வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோர் மானிய விலையில் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய பயோமெட்ரிக் அங்கீகாரச் செயல்முறையை முடிக்க வேண்டும். போலி, நகல் இணைப்புகளை அகற்ற உண்மையான குடும்பங்களுக்கு மட்டுமே மானிய பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்படி, வங்கிகள் இனி ஒரே வைப்புத்தொகை மற்றும் காலத்திற்கு வெவ்வேறு கிளைகளில் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. வங்கிகள் இப்போது வாடிக்கையாளர்களுக்கு சீரான வட்டி விகிதங்களை வழங்கும். வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் அறிவிக்க வேண்டும்.

புதிய விதிகளின்படி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை தாமதப்படுத்துவதற்கான விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றப்படுகின்றன. அதாவது பிறப்பு , இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் வழக்கம் போல் அந்தந்த உள்ளாட்சி அலுவலகத்தில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் 21 நாட்கள் கடந்து ஓராண்டு ஆகிவிட்டது என்றால் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் போன்ற அதிகாரிகளிடம்தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர் கொடுத்த தகவல்கள் உண்மையா என்பதை சரி பார்த்த பிறகே அனுமதி வழங்கப்படும்.

ஒரு வேளை 2 ஆண்டுகள் லேட்டாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம், அப்போது முதல் வகுப்பு நீதித் துறை நீதிபதியிடம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து , அங்கிருந்து உத்தரவு கிடைத்ததும்தான் பிறப்பு, இறப்பு பதிவை செய்ய முடியும்.

நீங்கள் வெளிநாடு வாழ் இந்தியரிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் உறவினர், நண்பர்களிடம் இருந்தோ ஒரு புதிய வீடு, மனை, நிலம் வாங்குவது இதுவரை சட்ட ஆவணங்கள், TAN எண் கிடைப்பதில் கடினம் இருந்திருக்கும். ஆனால் இன்று முதல் மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி பிடித்த கணக்கு எண்ணை (TAN) நிரந்தமாக நீக்கியுள்ளது.

தசரா, தீபாவளி பண்டிகை தொடங்கவுள்ள நிலையில் வீடுகளுக்கு புதிய டிவி, ஏசி வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு ஷாக் செய்தி! அதாவது இன்று முதல் நுகர்வோர் மின்னணு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களின் விலை 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கும்.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐயின் சேமிப்பு கணக்குகளில் மாதம் 4 முறை வரை பணம் எடுப்பது இலவசம். அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் ரூ 15+ ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு ரூ 2000-க்கு மேல் செய்யும் யுபிஐ பேமென்ட்களுக்கு அக்டோபர் 15 ஆம் தேதி 0.4 சதவீதம் எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் தனிநபர்களுக்கோ அல்லது சாமானியர்களுக்கோ பொருந்தாது.

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் அக்டோபர் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் அக்டோபர் இறுதியில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+