யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்த மனு.. 8 வாரத்தில் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரும் மனுவை, 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூபிஎஸ்சி தேர்வு ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் முதல் நிலை தேர்வு எழுதுகின்றனர். 2 லட்சம் பேர் வரை தேர்வாகி முதன்மைத்தேர்வு எழுதுகின்றனர். இறுதியில் 3000 பேர் வரை தேர்வாகி அதில் நேர்முதத்தேர்வில் 900 சிவில் பேர் ஆட்சிப்பணி அதிகாரிகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் என இந்தியா முழுவதும் ரேங்க் அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

ஆட்சிப்பணி என்பதால் ஆங்கிலம் அவசியம் என்பதால் ஆங்கிலத்தில் தேர்வு, நேர்முகத்தேர்வு நடக்கிறது. தாய்மொழியில் எழுதினாலும் பல பேப்பர்கள் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை.
இந்த நிலையில்தான், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக எடுத்துரைத்தார்
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதால், அலுவல் மொழியான ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுவதாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மனுதாரர் புதிதாக கோரிக்கை மனு அளிக்குமாறும், அதனை 8 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications