சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்!

2019 லோக் சபா தேர்தலை முன்னிட்டு அரசியல் தொடர்பான படங்கள் நிறைய வெளியாக இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளியானது தாக்கரே ட்ரைலர்... தென் இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்- வீடியோ

    சென்னை: 2019 லோக் சபா தேர்தலை முன்னிட்டு அரசியல் தொடர்பான படங்கள் நிறைய வெளியாக இருக்கிறது.

    2019 லோக் சபா தேர்தல் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தீவிரமாக செயலாற்றி வருகிறது.

    இந்த நிலையில் பாலிவுட், கோலிவுட் ஆகிய சினிமா துறையினரும் இந்த தேர்தலுக்காக படம் வெளியிட இருக்கிறார்கள். பல முக்கிய படங்கள் இந்த தேர்தல் நேரத்தில் வெளியாக வரிசைகட்டி நிற்கிறது.

    யூரி அட்டாக்

    யூரி அட்டாக்

    அடுத்த வருடம் பாலிவுட்டில் வெளியாக இருக்கும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் யூரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக். இந்த படம் ஆதித்யா தார் என்பவரால் இயக்கப்படுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

    தாக்கரே படம்

    தாக்கரே படம்

    சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தாக்கரே என்ற படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இந்த படம் மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழியிலும் வெளியாக உள்ளது. பிரபல ஹிந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக் இந்த படத்தில் நடிக்கிறார். சிவசேனாவின் கொள்கைகளை பரப்பும் வகையில் இந்த படம் உள்ளதாக இப்போதே இதற்கு எதிர்ப்பு கிளப்பி உள்ளது. இதில் தென்னிந்தியர்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    தி ஆக்சிடென்டல் பிரேம் மினிஸ்டர் படம்

    தி ஆக்சிடென்டல் பிரேம் மினிஸ்டர் படம்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வரலாற்றை மையமாக வைத்து வந்த புத்தகம்தான் தி ஆக்சிடென்டல் பிரேம் மினிஸ்டர். சஞ்சயா பாரு எழுதிய இந்த புத்தகத்தை தற்போது விஜய் ரத்னாகர் குட்டே என்பவர் படமாக எடுக்கிறார். இதற்கான டீசர் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.

    இப்படியா

    இப்படியா

    இந்த மூன்று படங்களுமே 2019 லோக் சபா தேர்தலை குறிக்கோளாக வைத்து வெளியாக உள்ளது. அதேபோல் இதில் இரண்டு படங்கள் பாஜகவின் அரசியலுக்கு உதவும் படங்கள் ஆகும். தி ஆக்சிடென்டல் பிரேம் மினிஸ்டர், யூரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகிய இரண்டு படங்களும் தேர்தலில் பாஜகவிற்கு உதவும் என்கிறார்கள். இன்னொரு படமான தாக்கரே பாஜகவின் நண்பனான சிவ சேனா கட்சிக்கு உதவும் என்று கூறுகிறார்கள்.

     தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இது இல்லாமல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழில் மூன்று படங்கள் தயாராகி வருகிறது. தி அயர்ன் லேடி என்ற பிரியதர்சன் இயக்கும் படம் ஏ.எல் விஜய் இயக்கும் இன்னொரு படம், பாரதிராஜா இயக்க திட்டமிட்டு இருக்கும் படம், மேலும் ஒரு ஆன்லைன் சீரிஸ் என்று வரிசையாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    URI, Thackeray, The accidental PM and The IRON Lady: These cinemas will play a big role in 2019 Poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X